close
Choose your channels

பிரபாஸ் அடுத்த படத்தில் வில்லனாகும் முன்னணி ஹீரோ! அதிகாரபூர்வ அறிவிப்பு

Thursday, September 3, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபாஸ் அடுத்த படத்தில் வில்லனாகும் முன்னணி ஹீரோ! அதிகாரபூர்வ அறிவிப்பு

பாகுபலி’ நாயகன் பிரபாஸ் தற்போது ’ராதே ஷ்யாம்’ மற்றும் ’நடிகையர் திலகம்’ இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் மூன்றாம் உலகப் போர் குறித்த பான் இந்தியா திரைப்படம் என்பதும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நடிகர் பிரபாஸ் நடிக்கும் 22-வது படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் அதிகாரபூர்வமாக வெளியானது. இந்த படத்தை பிரபல பாலிவுட் இயக்குனர் ஓம் ரவுட் என்பவர் இயக்க்கவுள்ளார். இப்படத்திற்கு ’ஆதி புருஷ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும், 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட பல இந்திய மொழிகளில் தயாரிக்கப்படும் பான்-இந்தியா திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் மெயின் வில்லனாக முன்னணி பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 7000 வருடங்களுக்கு முந்தைய ஒரு அமானுஷ்ய கேரக்டரில் தான் சயிப் அலிகான் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே அக்சயகுமார், விவேக் ஓபராய் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் தென்னிந்திய படங்களில் வில்லனாக நடித்திருக்கும் நிலையில் தற்போது சயிப் அலிகானும் வில்லனாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சயிப் அலிகான் இந்த படத்தில் இணைந்ததால் அகில இந்திய அளவில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியுள்ளது


 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment