பீட்டர்பால் விவகாரம்: வனிதாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகை வனிதா விஜயகுமார், பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில் வனிதா மீதும் கணவர் மீதும் பீட்டரின் முதல் மனைவி வழக்கு தொடர்ந்தார்

இந்த நிலையில் திடீரென வனிதா விஜயகுமார், பீட்டர்பாலிடம் இருந்து பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பீட்டரின் முதல் மனைவி தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்ததாகவும் நடிகை வனிதா, பீட்டர் பால் ஆகிய இருவரும் வரும் 23ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த உத்தரவின் அடிப்படையில் நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் பீட்டர்பால் ஆகிய இருவரும் வரும் 23ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பீட்டர் பால் மற்றும் வனிதா விஜயகுமார் ஆகிய இருவரும் தற்போது பிரிந்து உள்ள நிலையில் இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

More News

ரத்தன் டாடா பயோபிக்கில் நடிக்கின்றாரா மாதவன்? அவரே அளித்த விளக்கம்!

இந்திய திரையுலகில் அவ்வப்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வரும் என்பதும், கிட்டத்தட்ட அனைத்து பயோபிக் திரைப்படங்களும் வெற்றி பெற்றுவருகிறது

நான் எதிர்பார்க்கவே இல்லை நிஷா: கமல் கேள்வியால் அதிர்ச்சி அடைந்த நிஷா

பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் இரண்டு பேர் எவிக்சன் செய்யப்பட உள்ள நிலையில் அதில் ஒருவர் ஜித்தன் ரமேஷ் என்று வெளிவந்த செய்தியையும் பார்த்தோம்

திருமணக் கோலத்தில் சென்ற இளம் பெண்ணின் பின்னால் 6 கி.மீ தூரம் நாய் துரத்திய சம்பவம்!!!

சீனாவில் ஒரு இளம் பெண் தன்னுடைய திருமணத்தை முடித்துக் கொண்டு கணவன் வீட்டிற்கு செல்கிறார்

உயிருடன் மனித நரபலி… மண்டை ஓடுகளால் நிரம்பிய பழங்கால கோபுரம் கண்டுபிடிப்பு!!!

மெக்சிகோவில் நூற்றுக்கணக்கான மண்டை ஓடுகள் நிரம்பிய கோவில் கோபுரம் ஒன்றை மானுடவியல் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர்.

டபுள் எவிக்சனில் இன்று வெளியேறுபவர் இவர்தான்: அர்ச்சனா அதிர்ச்சி!

பிக்பாஸ் வீட்டில் அன்பு குரூப் செய்யும் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 100வது நெருங்கி வருவதாலும், இந்த வாரம் முதல் டபுள் எவிக்சன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.