முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகனுக்கு என்ன ஆச்சு? ஆற்றில் கார் கவிழந்ததால் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற நிலையில் அவர் சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சைதை துரைசாமியின் மகனை மீட்பு குழுவினர் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி என்பவர் இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் நதி அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. அவரது கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இந்த விபத்தில் கார் ஓட்டுநர் பலியானதாகவும் ஓட்டுனர் உடல் மீட்கப்பட்டதாகவும் அவரது நண்பர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆனால் சைதை துரைசாமி மகன் வெற்றியின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவரை மீட்பு படையினர் தேடி வருவதாகவும் இது குறித்த தகவலை இமாச்சலப்பிரதேச போலீசார் தமிழக காவல் துறையிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மனித நேயம் என்ற அமைப்பின் தலைவராக சைதை துரைசாமி உள்ளார். இவரது அமைப்பில் பயிற்சி பெற்ற பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் முக ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்டு சைதை துரைசாமி தோல்வி அடைந்தார். ஆனால் அதே ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு சென்னை மேயர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments