முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகனுக்கு என்ன ஆச்சு? ஆற்றில் கார் கவிழந்ததால் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Monday,February 05 2024]

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் தனது நண்பர்களுடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற நிலையில் அவர் சென்ற கார் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாகவும் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட சைதை துரைசாமியின் மகனை மீட்பு குழுவினர் தேடி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி மகன் வெற்றி என்பவர் இமாச்சலப் பிரதேசத்தில் சட்லஜ் நதி அருகே காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. அவரது கார் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நிலையில் இந்த விபத்தில் கார் ஓட்டுநர் பலியானதாகவும் ஓட்டுனர் உடல் மீட்கப்பட்டதாகவும் அவரது நண்பர்கள் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் சைதை துரைசாமி மகன் வெற்றியின் நிலைமை என்ன ஆனது என்று தெரியவில்லை. ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட அவரை மீட்பு படையினர் தேடி வருவதாகவும் இது குறித்த தகவலை இமாச்சலப்பிரதேச போலீசார் தமிழக காவல் துறையிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஐஏஎஸ் ஐபிஎஸ் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மனித நேயம் என்ற அமைப்பின் தலைவராக சைதை துரைசாமி உள்ளார். இவரது அமைப்பில் பயிற்சி பெற்ற பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் முக ஸ்டாலினுக்கு எதிராக போட்டியிட்டு சைதை துரைசாமி தோல்வி அடைந்தார். ஆனால் அதே ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு சென்னை மேயர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

அரசியல் அறிவிப்புக்கு அண்டை மாநிலத்தில் 'கோட்' படப்பிடிப்பு.. குவிந்த ரசிகர்கள்..

தளபதி விஜய் நேற்று முன்தினம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சி தொடங்குவதை அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும்

வெறும் சட்டை மட்டும் தான் காஸ்ட்யூம். பிக்பாஸ் மதுமிதாவின் இன்ப அதிர்ச்சி போட்டோஷூட்..!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒருவரான மதுமிதா சமீபத்தில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களில் வெறும் சட்டை மட்டும் அணிந்து கிளாமர் புகைப்படங்களை

விஜய்யின் கடைசி படம் 'தளபதி 69' இல்லையா? அதுக்கு அப்புறமும் 2 படம் இருக்கா?

தளபதி விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை சமீபத்தில் தொடங்கிய நிலையில் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏற்கனவே ஒரு படம் கமிட் ஆகி இருப்பதை அடுத்து

விஜய் கபளீகரம் செய்ய போவது இந்த கட்சியை தான்: கஸ்தூரி கணிப்பு

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதால் எந்த கட்சிக்கு வாக்கு சதவீதம் குறையும் என்ற வாக்குவாதம் சமூக வலைதளங்களில் நடந்து கொண்டிருக்கும் நிலையில்  நடிகை கஸ்தூரி

விஷ்ணு விஷால் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்

நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளதை அடுத்து அந்த படத்திற்கு இப்போதே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.