விஜய்க்காக ரிஸ்க் எடுக்கும் சாய்பல்லவி

  • IndiaGlitz, [Tuesday,December 25 2018]

நடிகை சாய்பல்லவியை இன்னும் மலர் டீச்சராகவே பலர் நினைத்து வருகின்றனர். அந்த கேரக்டர் மீதான மரியாதை காரணமாக சாய்பல்லவி தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார். அதன் பின் அவர் நடித்த முதல் தமிழ்ப்படமான ஏ.எல்.விஜய் இயக்கிய 'கரு' திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் சாய்பல்லவியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தது.

இந்த நிலையில் தனுஷூடன் மாரி 2 படத்தில் சாய்பல்லவி நடித்த அராத்து ஆனந்தி கேரக்டருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கி வரும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் சாய்பல்லவி, சசிகலா வேடத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் சசிகலா கேரக்டரில் சாய்பல்லவி நடிப்பதை இன்னும் படக்குழுவினர் உறுதி செய்யவில்லை

தமிழ் ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்று வரும் நிலையில் இயக்குனர் விஜய்க்காகவே சசிகலா கேரக்டரில் சாய்பல்லவி ரிஸ்க் எடுத்து நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படம் ஜெயலலிதாவின் சினிமா வாழ்க்கையில் தொடங்கி அரசியல் வாழ்க்கையில் எண்ட்ரி ஆகும்போது முடிவதால், சசிகலா கேரக்டருக்கு முக்கியத்துவம் அதிகம் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

More News

கார்த்தியின் 'தேவ்' இசை வெளியீடு தேதி அறிவிப்பு

'தீரன் அதிகாரம் ஒன்று', 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு வெற்றி படங்களை அடுத்து கார்த்தி நடித்து வரும் திரைப்படம் 'தேவ்'. இந்த படத்தின் சிங்கிள் பாடலான 'அனங்கே சிணுங்கலாமா?

எம்.எல்.ஏ மீது நடிகை போலீஸ் புகார்

தெலுங்கு நடிகை அபூர்வா, தெலுங்கு தேச எம்.எல்.ஏ ஒருவர் மீது புகார் அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் திலகம் எம்ஜிஆர் குறித்து அரிய தகவல்கள்: நடிகர் ராஜேஷ்

மக்கள் திலகம் எம்ஜிஆர் நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்ட நிலையில் நடிகர் ராஜேஷ், எம்ஜிஆர் குறித்த சில அரிய தகவல்களை கூறியுள்ளார்.

துருவ் விக்ரமின் 'வர்மா' ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கிய 'வர்மா' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.

தமிழ் மட்டும் வெள்ளக்காரன் மொழியா இருந்திருந்தா?...'ழகரம்' டிரைலர் விமர்சனம்

ஈரம், அதிதி, அனந்தபுரத்து வீடு உள்பட பல திரைப்படங்களில் நாயகனாக நடித்த நடிகர் நந்தா ஹீரோவாக மீண்டும் நடித்து வரும் திரைப்படம் 'ழகரம்'. தமிழுக்கு மட்டுமே சிறப்பு எழுத்தாக இருக்கும்