சாய்பல்லவியின் தாராள மனதால் தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

  • IndiaGlitz, [Wednesday,January 09 2019]

கடந்த மாதம் 21ஆம் தேதி தனுஷூடன் சாய்பல்லவி நடித்த 'மாரி 2' திரைப்படம் ரசிகர்கள் அளவிலும், வசூல் அளவிலும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. ஆனால் அதே தினத்தில் சாய்பல்லவி நடித்த தெலுங்கு படமான 'Padi Padi Leche Manasu' என்ற படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இந்த படத்தால் தயாரிப்பாளருக்கு சுமார் ரூ.15 கோடி நஷ்டம் என கூறப்படுகிறது. இருப்பினும் இந்த படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு இருக்கும் சம்பள பாக்கியை தயாரிப்பாளர் கொடுத்து வருகிறாராம்.

அந்த வகையில் சாய்பல்லவிக்கு கொடுக்க வேண்டிய ரூ.40 லட்சத்தை தயாரிப்பாளர் கொடுக்க முன்வந்தபோது, தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை கருத்தில் கொண்டு பணத்தை வாங்க மறுத்துவிட்டாராம். சாய்பல்லவியின் பெற்றோரும் இதையே கூற தயாரிப்பாளர் நெகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. படம் வெற்றி அடைந்தாலும், தோல்வி அடைந்தாலும் கறாராக சம்பள பாக்கியை கேட்டு வாங்கும் நட்சத்திரங்களின் மத்தியில் சாய்பல்லவின் தாராள மனதால் டோலிவுட்டில் அவருக்கு மரியாதை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.