சாய்பல்லவியின் சால்சா டான்ஸ்: 8 வருடத்திற்கு முந்தைய வீடியோ வைரல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
’பிரேமம்’ என்ற திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற கேரக்டரில் நடித்து தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. அதன் பின்னர் தமிழில் ’தியா’ ’மாரி 2’, ‘என்ஜிகே’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பதும் தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் 8 வருடத்துக்கு முன் நடிகை சாய் பல்லவியின் சால்சா டான்ஸ் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. திரைப்படங்களில் கவர்ச்சி இல்லாமல் டீசன்டாக நடிக்கும் சாய்பல்லவி, இந்த சால்சா டான்ஸில் கவர்ச்சி கடலில் மூழ்கி, பம்பரமாக சுழன்று டான்ஸ் ஆடும் காட்சிகள் உள்ளன.
இந்த வீடியோவை பார்த்துவிட்டு 8 வருடத்துக்கு முன்பே சாய்பல்லவி இவ்வளவு பெரிய டான்ஸரா? என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். சாய்பல்லவி அடிப்படையில் ஒரு மருத்துவராக இருந்தாலும் சினிமா மீது உள்ள ஆசையால் அவர் நடிக்க வந்தார். இருப்பினும் அவருக்கு மிகவும் பிடித்தது டான்ஸ் தான் என்பதும், அவர் பல நடன நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments