நடிகை சாய்பல்லவியின் அடுத்த படம்.. ஹீரோ இந்த பிரபலமா? அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சாய் பல்லவி நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்கும் ஹீரோவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ், மலையாளம், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’எஸ்கே 21’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நாக சைதன்யா நடிக்கும் அடுத்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார். நாக சைதன்யாவுடன் சாய் பல்லவி நடிக்க இருக்கும் தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’லவ் ஸ்டோரி’ என்ற படத்தில் நாக சைதன்யா, சாய்பல்லவி ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பதும் அந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
So happy to be part of this loving team❤️Thank you for the warm welcome @GeethaArts #BunnyVas @chandoomondeti @chay_akkineni Garu, I’m glad that we’re doing another special film together☺️
— Sai Pallavi (@Sai_Pallavi92) September 20, 2023
Naa priyamaina telugu prekshakulu, I missed you all so much!! Ippudu #NC23 dwara… pic.twitter.com/B4AicFhwKb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments