தனுஷ்-சேகர் கம்முலா படத்தில் இவர் தான் நாயகியா? மீண்டும் ஒரு சாதனை?

  • IndiaGlitz, [Saturday,June 19 2021]

தனுஷ் நடித்த ’ஜகமே தந்திரம்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்று அவர் நடிக்கயிருக்கும் இன்னொரு படம் குறித்த அறிவிப்பு வெளியானது. தேசிய விருது பெற்ற தனுஷ், தேசிய விருது பெற்ற பாலிவுட் இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த படம் தமிழ் தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது .இது ஒரு பான் - இந்தியா படம் என்பதால் தனுஷ் ரசிகர்கள் இந்த அறிவிப்பை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தனுஷ் தற்போது ‘தி க்ரே மேன்’ என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு உள்ள நிலையில் அவர் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பி வந்ததும், கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இதனை அடுத்து அவர் சேகர் கம்முலா படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தனுஷ்-சேகர் கம்முலா இணையும் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் சாய்பல்லவி நாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் அவரிடம் படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே சாய்பல்லவி, சேகர் கம்முலா இயக்கத்தில் Fidaa, Love Story ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பதும் அதேபோல் தனுசுடன் ’மாரி 2’ திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘மாரி 2’ திரைப்படத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி நடனமாடிய ’ரவுடி பேபி’ பாடல் யூடிபில் உலக அளவில் சாதனை செய்த நிலையில் இதே ஜோடி மீண்டும் இணைந்தால், மீண்டும் ஒரு சாதனை செய்யப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.