தங்கை திருமணத்தில் ஆட்டம், பாட்டம் கொண்டாட்டம்... சாய் பல்லவியின் வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை சாய் பல்லவி சகோதரிக்கு நேற்று திருமணம் நடந்த நிலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் இந்த திருமண விழா நடந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ், தெலுங்கு , மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சாய் பல்லவி சகோதரி பூஜா என்பவரின் திருமணம் நேற்று நடந்தது. நடந்த ஜனவரி மாதம் பூஜா - வினீத் நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நேற்று நடந்த திருமண விழாவில் நடிகை சாய் பல்லவி உள்பட அவர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்ட புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
குறிப்பாக சாய் பல்லவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சகோதரி திருமணத்தில் உறவினர்களுடன் ஆட்டம் ஆடிய வீடியோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த ’அமரன்’ திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்துள்ள நிலையில் இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சாய் பல்லவியின் சகோதரி திருமணம் குறித்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு எப்போது திருமணம்? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு சாய் பல்லவி விரைவில் பதில் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The QUEEN sisters Dancing for QUEEN song London Thumakda in wedding💃❤️🔥@Sai_Pallavi92 #SaiPallavi #PoojaKannan #SaiPallaviSisterWedding pic.twitter.com/Mjz10B6qZg
— Sai Pallavi FC™ (@SaipallaviFC) September 6, 2024
OMG...Sai Pallavi n her Sister Danced for Marati Song Apasara Aali 😭💃❤️🔥@Sai_Pallavi92#Saipallavi #PoojaKannan#SaiPallaviSisterWedding pic.twitter.com/xCYxct9oIX
— Sai Pallavi FC™ (@SaipallaviFC) September 4, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments