காஷ்மீர் அழகா? சாய் பல்லவி அழகா? வைரலாகும் க்யூட் புகைப்படங்கள், வீடியோ..!

  • IndiaGlitz, [Wednesday,July 12 2023]

சிவகார்த்திகேயன் நடித்து வரும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பதும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் சாய் பல்லவி கலந்து கொண்டு இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் அவ்வப்போது காஷ்மீரில் உள்ள கொள்ளை அழகு காட்சிகளின் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் அவை மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் சற்றுமுன் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காஷ்மீர் அழகை புகைப்படங்களால் பதிவு செய்துள்ள நிலையில் அதற்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகிறது. காஷ்மீரின் இயற்கை அழகா? அல்லது சாய் பல்லவியின் இயல்பான அழகு பெரிதா? என்று பட்டிமன்றம் நடத்தலாம் என்று பலர் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

‘நேச்சுரல் குயின்’ என்ற பட்டத்தை ரசிகர்கள் சாய் பல்லவிக்கு கொடுத்துள்ள நிலையில் அதற்கேற்றார் போல் இந்த புகைப்படங்கள் இருக்கின்றன என்றும் இந்த புகைப்படங்கள் வெளியாகி சில மணி நேரங்களில் ஆகி உள்ள நிலையில் சுமார் 13 லட்சம் லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.