விஜய்சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த தன்ஷிகா!

  • IndiaGlitz, [Tuesday,August 13 2019]

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்து வரும் படங்களில் ஒன்று 'லாபம்'. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வரும் இந்தப் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் ஜெகபதிபாபு நடித்து வருகிறார். 'பேராண்மை' உள்பட பல வெற்றி படங்களை இயக்கிய எஸ்பி ஜனநாதன் இந்த படத்தை இயக்கி வருகிறார்

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க நடிகை தன்ஷிகா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவர் ஏற்கனவே 'பேராண்மை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. இந்த படத்தில் நடிப்பது குறித்து கருத்து தெரிவித்த தன்ஷிகா, 'லாபம் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடிக்க இயக்குனர் கேட்டுக் கொண்டபோது தான் சற்றும் யோசிக்காமல் ஒப்புக்கொண்டதாகவும் ஏனெனில் கதையில் உள்ள ஒவ்வொரு கேரக்டருக்கும் இயக்குனர் முக்கியத்துவம் தருவார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறினார்.

மேலும் விஜய் சேதுபதி மற்றும் ஜெகபதிபாபு ஆகிய இருவருடனும் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக அவர் தெரிவித்தார்

விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன், தன்ஷிகா, கலையரசன், ஜெகபதிபாபு, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடிக்கும் இந்த படத்தில் சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடிக்கின்றார். டி.இமான் இசையில் ராம்ஜி ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்சேதுபதி மற்றும் ஆறுமுக குமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர்

More News

திருடர்களை விரட்டியடித்த நெல்லை முதியவர்களுக்கு பிரபல நடிகர்  பாராட்டு!

சமீபத்தில் நெல்லை அருகே ஒரு வயதான தம்பதியர்களை இரண்டு திருடர்கள் கையில் ஆயுதங்களுடன் தாக்க முற்படுகையில் வயதான முதியவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து

'நேர்கொண்ட பார்வை' படம் பார்த்து குற்ற உணர்ச்சி ஏற்பட்டது: பிரபல இயக்குனர்

அஜித் நடித்த 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் கடந்த 8ஆம் தேதி வெளியாகி ஆறாவது நாளான இன்றும் திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் படத்தை அடுத்து மேலும் பிரபல நடிகரின் படத்தில் மீராமிதுன்

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவராகிய மீராமிதுன், சர்ச்சைக்குரிய போட்டியாளர்களில் ஒருவராக காணப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருக்கும்போது சக போட்டியாளர்கள் மீது பழிசுமத்துவது

ஜெயம் ரவியின் 'கோமாளி' ரன்னிங் டைம்!

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் இன்னும் இரண்டு நாட்களில் அதாவது ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கான புரமோஷன் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது

வனிதா பற்ற வச்ச நெருப்பால் பொங்கி எழுந்த அபிராமி: டென்ஷன் ஆன முகின்

பிக்பாஸ் வீட்டில் வனிதாவின் வரவு நிச்சயம் பரபரப்பை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. ஆனால் இந்த அளவுக்கு உடனே பற்ற வைக்கும் என்பதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.