டூப்பே இல்லாமல் அந்தரத்தில் டைவ் அடித்த இளம் நடிகை… வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2009 ஆம் ஆண்டு நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த திரைப்படம் “பேராண்மை”. இந்தப் படத்தில் அறிமுகமானவர் நடிகை சாய் தன்ஷிகா. போல்டான கேரக்டரில் அறிமுகமான இவர் தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் மற்றும் போல்ட் கேரக்டரில் நடித்து வந்தார். மேலும் தமிழ் தவிர கன்னடம், மலையாளம் போன்ற மொழிப் படங்களில் இவர் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது “யோகி டா” எனும் படத்தில் நடித்து வரும் நடிகை சாய் தன்ஷிகா அந்தப் படத்தின் ஒரு காட்சிக்காக தலைகீழாக அந்தரத்தில் தொங்கி டைவ் அடித்து இருக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்தப் படத்தில் இவருக்கு பல ஆக்ஷன் காட்சிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ஆக்ஷன் காட்சிகளுக்கு நடிகை சாய் தன்ஷிகா டூப்பே இல்லாமல் நடித்து வருவதாகவும் படக்குழு தெரிவித்து இருக்கிறது.
இந்நிலையில் நேற்று மகளிர் தினத்தை முன்னிட்டு நடிகை சாய் தன்ஷிகா நடித்த சில ஆக்ஷன் காட்சிகளை அந்தப் படக்குழு சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மகளிர் தின வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டு இருக்கிறது. அப்படி வெளியான காட்சிகளில் நடிகை சாய் தன்ஷிகாவை பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
#SaiDhanshika, Gets Trained For Her Upcoming Venture #Yogida, Which Is In The Final Leg Of Shooting Process!!
— Sathish Maalaimalar (@SatthiEshwar) March 8, 2021
More Details To Be Revealed Soon! @SaiDhanshika @PRO_Priya @spp_media pic.twitter.com/gS4SCZq0Wa
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments