அருண்விஜய் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

  • IndiaGlitz, [Tuesday,December 18 2018]

அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக அவதாரம் எடுத்த அருண்விஜய், மீண்டும் வில்லனாக நடித்து வரும் படம் பிரபாஸின் 'சாஹோ'.

பாகுபலி, பாகுபலி 2' ஆகிய வெற்றி படங்களுக்கு பின் பிரபாஸ் நடித்து வரும் பிரமாண்டமான படமான 'சாஹோ' படத்தில் ஹீரோவுக்கு இணையான அழுத்தமான வில்லன் வேடத்தில் அருண்விஜய் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படம் வரும் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் அருண்விஜய் உறுதி செய்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் 'சாஹோ' படத்தில் பிரபாஸ், ஷராதா கபூர், அருண்விஜய், ஜாக்கி ஷாரப், உள்பட பலர் நடித்து வருகின்றனர். சுஜித் இயக்கத்தில் தமன் இசையில், மதி ஒளிப்பதிவில், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படம் சுமார் ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது.

 

More News

பழம்பெரும் 'மேக்கப்மேன்' முத்தப்பா மறைவு: ரஜினிகாந்த் அஞ்சலி

சென்னையில் இன்று காலை பழம்பெரும் மேக்கப்மேன் முத்தப்பா அவர்கள் காலமானார். அவருடைய மறைவிற்கு திரையுலகமே திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகிறது.

ஆபாச மெசேஜ் அனுப்பிய ஜொல்லருக்கு நாகரீகமாக பதிலடி கொடுத்த டாப்சி

தனுஷ் நடித்த 'ஆடுகளம்' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகிய நடிகை டாப்சி, அதன் பின் அஜித்தின் 'ஆரம்பம்', ஐஸ்வர்யா தனுஷின் 'வை ராஜா வை' உள்பட பல படங்களில் நடித்தார்

'பொம்பள தலை' என பிரபல நடிகையை குறிப்பிட்ட ரோபோ சங்கர்

லேடி சூப்பர் ஸ்டார் என நடிகை நயன்தாராவை கோலிவுட் திரையுலகமே அழைத்து வருவது போல் பிரபல நடிகை ஒருவருக்கு நடிகர் ரோபோ சங்கர் 'பொம்பள தல' என்று பட்டத்தை வழங்கியுள்ளார்.

'மாநாடு' படத்தின் கதையை கேட்டவுடன் தலை சுற்றியது: எடிட்டர் ப்ரவீண்

மணிரத்னம் இயக்கிய 'செக்க சிவந்த வானம்' படத்தை அடுத்து சிம்பு தற்போது 'நான் ராஜாவாதான் வருவேன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினிக்கு எதிரான போத்ராவின் அவதூறு வழக்கு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா என்பவர் தாக்கல் செய்த அவதூறு வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.