தமிழ் பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது… முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
2021 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் பெண் எழுத்தாளரான அம்பை எனும் புனைப்பெயரைக் கொண்ட சி.எஸ்.லட்சுமிக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவருடைய “சிவப்பு கழுத்துக்களுடன் ஒரு பச்சை பறவை“ எனும் சிறுகதை நூலானது சிறந்த சிறுகதை தொகுப்பு என்ற வரிசையில் அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட இருக்கிறது.
இந்தியாவில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்களை சிறப்பிக்கும் வகையில் 6 பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ராஜஸ்தானி, உருது, சிந்தி, இந்தி போன்ற 24 மொழிகளில் எழுதப்பட்ட நூல்களைத் தேர்வுசெய்த இந்த சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. மேலும் விருது பெறும் எழுத்தாளர்களுக்கு விருதுடன் தாமிரப் பட்டயம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் அம்பை எழுதிய “சிவப்பு கழுத்துக்களுடன் ஒரு பச்சை பறவை“ எனும் சிறுகதைத் தொகுப்பு இந்த ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பாக தேர்வுச் செய்யப்பட்டு உள்ளது. 77 வயதான அம்பை தமிழில் முற்போக்கான பல இலக்கியங்களை எழுதியுள்ளார். பல இளம் வாசகர்களுக்கு அவர் சிறந்த முன்னுதாரணமாக இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
விருதுபெற்ற எழுத்தாளர் அம்பைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தனது சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற சிறுகதைத் தொகுப்புக்காக விருதுபெற்ற எழுத்தாளர் அம்பைக்கு வாழ்த்துகள். தமிழில் பல ஆண்டுகளுக்குப் பின் பெண் எழுத்தாளருக்கு விருது அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பெண் படைப்பாளிக்கு இது மேலும் ஊக்கமளிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல அசாமி எழுத்தாளராகவும் பத்திரிக்கையாளராகவும் செயல்பட்டுவரும் அனுராதா அர்மா பூஜாரி தன்னுடைய “யாட் எகோன் ஆரண்ய அசில்“ எனும் நாவலுக்காக சிறந்த நாவல் என்ற வரிசையில் இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
மேலும் “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை“ எனும் சிறுகதை தொகுப்பிற்காக தமிழகத்தைச் சார்ந்த இளம் எழுத்தாளர் மு.முருகேசன் இந்த ஆண்டிற்கான பால புரஸ்கர் விருதை தட்டிச்சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது 'சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை' என்ற சிறுகதைத் தொகுப்புக்காக #SahityaAkademi விருது பெற்ற எழுத்தாளர் அம்பைக்கு வாழ்த்துகள்!
— M.K.Stalin (@mkstalin) December 30, 2021
தமிழில், பல ஆண்டுகளுக்குப் பின் பெண் எழுத்தாளருக்கு விருது அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பெண் படைப்பாளிகளுக்கு இது மேலும் ஊக்கமளிக்கட்டும். pic.twitter.com/xgy9vBKreH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout