தமிழ் பெண் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது… முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

2021 ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது தமிழ் பெண் எழுத்தாளரான அம்பை எனும் புனைப்பெயரைக் கொண்ட சி.எஸ்.லட்சுமிக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இவருடைய “சிவப்பு கழுத்துக்களுடன் ஒரு பச்சை பறவை“ எனும் சிறுகதை நூலானது சிறந்த சிறுகதை தொகுப்பு என்ற வரிசையில் அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட இருக்கிறது.

இந்தியாவில் எழுத்தாளர்கள், ஆய்வாளர்களை சிறப்பிக்கும் வகையில் 6 பிரிவுகளில் ஒவ்வொரு ஆண்டும் உயரிய விருதான சாகித்ய அகாடமி விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அந்த வகையில் மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ராஜஸ்தானி, உருது, சிந்தி, இந்தி போன்ற 24 மொழிகளில் எழுதப்பட்ட நூல்களைத் தேர்வுசெய்த இந்த சாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது. மேலும் விருது பெறும் எழுத்தாளர்களுக்கு விருதுடன் தாமிரப் பட்டயம் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் அம்பை எழுதிய “சிவப்பு கழுத்துக்களுடன் ஒரு பச்சை பறவை“ எனும் சிறுகதைத் தொகுப்பு இந்த ஆண்டிற்கான சிறந்த சிறுகதைத் தொகுப்பாக தேர்வுச் செய்யப்பட்டு உள்ளது. 77 வயதான அம்பை தமிழில் முற்போக்கான பல இலக்கியங்களை எழுதியுள்ளார். பல இளம் வாசகர்களுக்கு அவர் சிறந்த முன்னுதாரணமாக இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

விருதுபெற்ற எழுத்தாளர் அம்பைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தனது சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை என்ற சிறுகதைத் தொகுப்புக்காக விருதுபெற்ற எழுத்தாளர் அம்பைக்கு வாழ்த்துகள். தமிழில் பல ஆண்டுகளுக்குப் பின் பெண் எழுத்தாளருக்கு விருது அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பெண் படைப்பாளிக்கு இது மேலும் ஊக்கமளிக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல அசாமி எழுத்தாளராகவும் பத்திரிக்கையாளராகவும் செயல்பட்டுவரும் அனுராதா அர்மா பூஜாரி தன்னுடைய “யாட் எகோன் ஆரண்ய அசில்“ எனும் நாவலுக்காக சிறந்த நாவல் என்ற வரிசையில் இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.

மேலும் “அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை“ எனும் சிறுகதை தொகுப்பிற்காக தமிழகத்தைச் சார்ந்த இளம் எழுத்தாளர் மு.முருகேசன் இந்த ஆண்டிற்கான பால புரஸ்கர் விருதை தட்டிச்சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

இரட்டைக் குழந்தை… அடுத்த நாளே லாட்டரியில் 2 கோடி வென்ற அதிர்ஷ்டசாலி இந்தியர்!

அபுதாபியில் வசித்துவரும் இந்தியரான பிஜேஸ் போஸ் இரட்டைக் குழந்தைக்கு தந்தையான அடுத்தநாளே லாட்டரி மூலம் 2

விஜய் படங்களிலேயே இதுதான் அதிக பட்ஜெட் படமா? ஆச்சரியத்தில் திரையுலகம்!

தளபதி விஜய் தற்போது 'பீஸ்ட்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ள நிலையில் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள 'தளபதி 66' திரைப்படத்தில் நடிக்க உள்ளார்

பெங்களூரு சென்ற கமல் என்ன செய்தார் தெரியுமா? ரசிகர்கள் நெகிழ்ச்சி!

ஒரு பக்கம் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு, இன்னொரு பக்கம் பிக்பாஸ் நிகழ்ச்சி என பிஸியாக இருக்கும் கமலஹாசன் சமீபத்தில் 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பிற்காக பெங்களூர் சென்றார்.

பிக்பாஸ் பாவனி நடித்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை பாவனி 88வது நாளாக வெற்றிகரமாக விளையாடி வருகிறார் என்பதும் அவர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் நான்கு போட்டியாளர்களில் ஒருவராக இருக்க

ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா' பாடலுக்கு வேற லெவல் போஸ் கொடுக்கும் யாஷிகா!

அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஓ சொல்றியா மாமா, ஓஓ சொல்றியா மாமா' என்ற பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் இந்த பாடலுக்கு சமந்தா ஆடிய ஐட்டம்