மறைந்த பிரபல தமிழ் கவிஞருக்கு சாகித்ய அகாதமி விருது

  • IndiaGlitz, [Thursday,December 21 2017]

சாகித்ய அகாதமி விருது என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் கனவாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாதமி விருது மறைந்த கவிஞர் இன்குலாப் மற்றும் பிரபல எழுத்தாளர் யூமா வாசுகி ஆகியோர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

‘காந்தள் நாட்கள்’ என்ற சிறுகதை தொகுப்புக்காக கவிஞர் இன்குலாப் அவர்களுக்கும், ‘கதாக்கின் இதிகாசம்' என்ற மலையாள நூல் மொழி பெயர்ப்பு புத்தகத்திற்காக யூமா வாசுகி அவர்களுக்கும் சாகித்ய அகாதமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்த கவிஞர் இன்குலாப், சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக்கல்லூரியில் 35 வருடங்களாக தமிழ் விரிவுரையாளராக பணி யாற்றினார். தமிழ் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர் என பன்முகம் கொண்ட இன்குலாப், ‘நாங்க மனுஷங்கடா', கண்மணி ராஜம், மீட்சி, சூரியனைச் சுமப்பவர்கள் போன்ற காலத்தால் அழியாத காவிய படைப்புகளை எழுதியுள்ளார். 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் இன்குலாப் மரணம் அடைந்தார். அவர் மரணம் அடைந்து சரியாக ஒரு வருடம் கழித்து அவருக்கு சாகித்ய அகாதமி என்ற பெருமை கிடைத்துள்ளது.

More News

ரஜினி-ரசிகர்கள் சந்திப்பு: எந்த நாளில் எந்த மாவட்ட ரசிகர்கள்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டிசம்பர் 26 முதல் 31ஆம் தேதி வரை இரண்டாவது கட்டமாக ரசிகர்களை சந்திக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்

தினமும் 20 மணி நேரம் கமல் வேலை செய்வது ஏன் தெரியுமா?

கமல்ஹாசன் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் இருந்து கொண்டு 'விஸ்வரூபம் 2' படத்தின் பணிகளை செய்து வருகிறார் என்பது தெரிந்ததே.

2ஜி தீர்ப்பு எதிரொலி: கனிமொழிக்கு புதிய பதவி தர ஆலோசனை

இன்று காலை வெளிவந்த 2ஜி அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பில் கனிமொழி உள்பட குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டதால்

'தளபதி 62' படம் குறித்த முக்கிய தகவல்

தளபதி விஜய் நடிக்கவுள்ள 62வது படமான 'தளபதி 62' படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக இணையதளங்களில் வெளியாகி டிரெண்ட் ஆகிவருகிறது

தமன்னாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகை தமன்னா இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு IndiaGlitz தனது மனங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறது.