விவசாயிகளின் போராட்டம் குறித்து சகாயம் ஐஏஎஸ் வெளியிட்ட அதிரடி கருத்து!
Send us your feedback to audioarticles@vaarta.com
டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டத் திருத்தத்தை திரும்ப பெறுமாறு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் 2 மாதங்களை கடந்த நிலையிலும் இணக்கமான முடிவினை எட்டவில்லை. இதனால் தொடர்ந்து சமூக ஆர்வலர்களும், அரசியல் தலைவர்களும் இந்தப் போராட்டத்தைக் குறித்து கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்ற சகாயம் ஐஏஎஸ் இதில் தன்னுடய நிலைப்பாட்டைக் குறித்து கருத்துத் தெரிவித்து உள்ளார். முன்னதாக அரசாங்க பதவியில் இருந்தபோது இத்தகைய போராட்டங்களைக் குறித்து வெளிப்படையாகப் பேசாத அவர் முதல் முறையாக வேளாண் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றும் விவசாயிகளுக்கு இதில் நம்பிக்கை ஏற்படாமல் இருப்பதால்தான் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கருத்துத் தெரிவித்து இருக்கிறார்.
மேலும் நல்லவர்கள் யார் என்பதை இளைஞர்கள் அடையாளம் கண்டு கொண்டு வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முன்வர வேண்டும் என்றும் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். 57 வயதான சகாயம் முன்னதாக முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளார் என்பது போன்ற தகவலும் வெளியாகி இருந்தது. இந்நிலையில் விருப்ப ஓய்விற்கு பிறகு அவர் தன்னுடைய வேலைப்பாடுகள் குறித்த எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடாமல் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments