சினிமாவுக்கு வந்துவிட்டார் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் 

  • IndiaGlitz, [Monday,May 07 2018]

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஐஏஎஸ் அதிகாரி சகாயம். ஊழலை எதிர்க்கும் நேர்மையான, தைரியமான அதிகாரிகளில் மிகச்சிலரில் இவரும் ஒருவர். குறிப்பாக மதுரையில் கிரானைட் மற்றும் கனிம மணற் கொள்ளை குறித்து சகாயம் செய்த விசாரணை பல ஊழல் முதலைகளை திடுக்கிடை வைத்தது.

இந்த நிலையில் சகாயம் விரைவில் அரசியலுக்கு வரவேண்டும் என்ற குரல் இளைஞர்கள் மத்தியில் ஓங்கி வரும் நிலையில் தற்போது அவர் சினிமாவுக்கு வந்துவிட்டார். சமூக போராளியான டிராபிக் ராமசாமி குறித்த திரைப்படம் ஒன்று உருவாகி வருகிறது என்பதும் இந்த படத்தில் டிராபிக் ராமசாமி கேரக்டரில் இயக்குனரும் தளபதி விஜய் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தின் டீசரை ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் நாளை மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார். ஒரு சமூக போராளி குறித்த வாழ்க்கை வரலாறு படத்தின் டீசரை ஊழலை ஒழிக்க போராடி வரும் ஒரு ஐஏஸ் அதிகாரி வெளியிடுவது பொருத்தமாக கருதப்படுகிறது