தேர்தலில் குதித்த சகாயம் குழு… விருப்ப ஓய்வுக்கு பிறகு அதிரடி!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து சகாயம் ஐஏஎஸ் அவர்கள் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவலை ஊடகங்கள் பரப்பி வந்தன. இந்நிலையில் வரப்போகும் 2021 ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவை தேர்தலில் சகாயம் குழு 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்த அணி ஊழல் சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக நாம் களம் காண்போம் என்ற முழக்கத்துடன் “தமிழ்நாடு இளைஞர் கட்சி”, “வளமான தமிழகம் கட்சி“ என்று இரண்டு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இத்தேர்தலில் சகாயம் வேட்பாளராக போட்டியிட மாட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய அணி போட்டியிடுவது குறித்து சகாயம், சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டேன். எனவே தேர்தல் அரசியல் தாண்டி ஊழல் சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக களம் காண்போம். வளங்களை பெரும் வணிக சக்திகள் பறித்து செல்வதை இந்த மண்ணை உளமார நேசிக்கும் நாம் தடுக்க வேண்டும்.
நான் தேர்தலில் களம் இறங்க திட்டமிட்டுள்ளேன். குறுகிய கால அவகாசம் இருக்கும் நிலையில் புதிய அரசியல் கட்சி துவங்க முடியவில்லை. எனவே குறிப்பிட்ட தொகுதிகளை சகாயம் குழு தேர்தல் களம் காணும் எனத் தெரிவித்து உள்ளார். முன்னதாக ஆட்சியராக பணியாற்றியபோது பல துறைகளிலும் தன்னுடைய திறமையான நிர்வாகத்தை வெளிப்படுத்தி இருந்த சகாயம் மதுரையில் நடக்கும் மணல் மாஃபியாக்களை அடையாளம் காட்டியதன் மூலம் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சிப் பெற்றார். இதனால் அரசியலிலும் அவர் தற்போது கால் பதித்து இருக்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout