தேர்தலில் குதித்த சகாயம் குழு… விருப்ப ஓய்வுக்கு பிறகு அதிரடி!

  • IndiaGlitz, [Monday,March 15 2021]

கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து சகாயம் ஐஏஎஸ் அவர்கள் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவலை ஊடகங்கள் பரப்பி வந்தன. இந்நிலையில் வரப்போகும் 2021 ஆம் ஆண்டு தமிழகச் சட்டப்பேரவை தேர்தலில் சகாயம் குழு 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிடப் போவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இந்த அணி ஊழல் சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக நாம் களம் காண்போம் என்ற முழக்கத்துடன் “தமிழ்நாடு இளைஞர் கட்சி”, “வளமான தமிழகம் கட்சி“ என்று இரண்டு கட்சி சார்பில் போட்டியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இத்தேர்தலில் சகாயம் வேட்பாளராக போட்டியிட மாட்டார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் தன்னுடைய அணி போட்டியிடுவது குறித்து சகாயம், சமீபத்தில் விருப்ப ஓய்வு பெற்றுக்கொண்டேன். எனவே தேர்தல் அரசியல் தாண்டி ஊழல் சாம்ராஜ்ஜியத்துக்கு எதிராக களம் காண்போம். வளங்களை பெரும் வணிக சக்திகள் பறித்து செல்வதை இந்த மண்ணை உளமார நேசிக்கும் நாம் தடுக்க வேண்டும்.

நான் தேர்தலில் களம் இறங்க திட்டமிட்டுள்ளேன். குறுகிய கால அவகாசம் இருக்கும் நிலையில் புதிய அரசியல் கட்சி துவங்க முடியவில்லை. எனவே குறிப்பிட்ட தொகுதிகளை சகாயம் குழு தேர்தல் களம் காணும் எனத் தெரிவித்து உள்ளார். முன்னதாக ஆட்சியராக பணியாற்றியபோது பல துறைகளிலும் தன்னுடைய திறமையான நிர்வாகத்தை வெளிப்படுத்தி இருந்த சகாயம் மதுரையில் நடக்கும் மணல் மாஃபியாக்களை அடையாளம் காட்டியதன் மூலம் தமிழக இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சிப் பெற்றார். இதனால் அரசியலிலும் அவர் தற்போது கால் பதித்து இருக்கிறார்.

More News

முதல் போட்டியிலேயே அடித்து நவுத்திய இஷான் கிஷன்! குவியும் வாழ்த்து!

இங்கிலாந்துக்கு எதிரான 2 ஆவது டி20 போட்டி நேற்று அகமதாபாத் மெதோரோ கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது

காதலருடன் கூட்டணி வைத்து யோகா செய்யும் பாலிவுட் நடிகை! வைரல் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் நடிகையாக இருப்பதோடு பிரபல மாடலாகவும் அறியப்படுபவர் நடிகை சாக்ஷி மாலிக்.

மனைவி, இரட்டை குழந்தைகளுடன் பரத்: வீட்ல என்ன விசேஷம்?

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகிய நடிகர் பரத் அதன்பின் 'காதல்' பட்டியல்' 'எம் மகன்' 'வெயில்' 'நேபாளி' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்

100 எபிசோட் சீரியலில் நடித்தும் கண்டுகொள்ளப்படாத 'குக் வித் கோமாளி' அஸ்வின்!

கடந்த 2015 ஆம் ஆண்டு 100 எபிசோடு உள்ள சீரியல் ஒன்றில் நடித்தும் கண்டுகொள்ளப்படாத அஸ்வின், அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு 90 எபிசோடு கொண்ட சீரியலில் நடித்தும் கண்டுகொள்ளப்படாத அஸ்வின்

தேர்தல் துளிகள்: 15 மார்ச் 2021

கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தற்போது அமமுகவுடன் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறது.