நிர்வாண ஆடிஷன் நடத்தினாரா ராஜ்குந்த்ரா? பிரபல நடிகையின் திடுக் வாக்குமூலம்!

  • IndiaGlitz, [Saturday,July 24 2021]

ஆபாச திரைப்படங்கள் எடுத்து வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்ததாக பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தன்னை நிர்வாண ஆடிஷன் எடுத்ததாக நடிகை ஒருவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை சகாரிக்கா சோனா என்பவர் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் ராஜ்குந்த்ரா தன்னை நிர்வாணமாக நடித்து காட்ட சொன்னதாகவும் அவர் ஆபாச படங்கள் தயாரிப்பது உண்மைதான் என்றும் திடுக்கிடும் தகவலை கூறியுள்ளார்.

மேலும் ராஜ் குந்த்ரா குறித்த உண்மைகளை கூறிய பின்னர் தனக்கு கொலை மிரட்டல் மற்றும் ஆபாச மெசேஜ் வருவதாகவும் இது குறித்து மும்பை போலீசாரிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் ராஜ்குந்த்ரா குறித்து மேலும் காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில் எதிர்காலத்தில் அவர் ஆபாச படங்களை நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளது. இதற்கான எலக்ட்ரானிக் ஆதாரங்களையும் காவல்துறையினர் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது.