கோடியில் புரளும் கால்பந்து வீரரின் டிஸ்ப்ளே உடைந்த மொபைல்: என்ன காரணம் தெரியுமா?

தற்போது நடுத்தர வர்க்கத்தினர் கூட மொபைல் போனில் டிஸ்ப்ளே உடைந்துவிட்டால் உடனே அந்த மொபைல் போனை தூக்கி போட்டு விட்டு புதிய மொபைல் போனை வாங்கி கொண்டிருக்கும் நிலையில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் கால்பந்து வீரர் ஒருவர் உடைந்த டிஸ்பிளே உள்ள மொபைலை பயன்படுத்தி வருகிறார். அதற்கு அவர் கூறும் காரணம் தான் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மேற்கு ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த சாடியோ மானே என்ற கால்பந்து வீரர் இந்திய ரூபாயில் ஒரு வாரத்திற்கு 140 கோடி சம்பாதிப்பதாக தெரிகிறது. அவ்வளவு சம்பாதிக்கும் அவர் சமீபத்தில் விமான நிலையத்தில் இருந்து வரும்போது உடைந்த மொபைலுடன் காணப்பட்டார்.

இதுகுறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது ’டிஸ்ப்ளேவை சரி செய்து விடுவேன்’ என்று கூறினார். அதற்கு செய்தியாளர்கள் ’நீங்கள் ஏன் டிஸ்பிளேவை சரி செய்ய வேண்டும், வேறு மொபைல் வாங்கலாமே? என்று கேட்டதற்கு ’கண்டிப்பாக வாங்கலாம் தான். என்னுடைய வருமானத்தில் ஒரு மொபைல் என்ன, ஆயிரம் மொபைல்கள் கூட வாங்கலாம். ஆனால் அதை நான் ஏன் வாங்க வேண்டும்? நான் வறுமையை பார்த்திருக்கிறேன், சாப்பாட்டுக்கு கூட இளம் வயதில் கஷ்டப்பட்டு இருக்கிறேன், நான் சிறு வயதில் வறுமை காரணமாக படிக்க முடியவில்லை, காலனி கூட இல்லாமல், நல்ல உடை இல்லாமல் இருந்திருக்கின்றேன்.

இன்று நான் நிறைய சம்பாதிக்கிறேன் என்பதற்காக அனாவசியமாக செலவு செய்ய விரும்பவில்லை. என் நாட்டில் உள்ள ஏழை குழந்தைகள் என்னை போல் கஷ்டப்பட கூடாது. அவர்களுக்கு புதிய காலணிகள் உடைகளும் என்னுடைய பணத்திலிருந்து வாங்கி கொடுக்கிறேன். நான் என்னுடைய பணத்தில் வசதியாக வாழ்வதற்கு பதிலாக அந்த பணத்தை என் நாட்டு மக்களுக்கு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறியுள்ளார். அவர் இந்த பதிலை கேட்டு உண்மையிலேயே அவர் அற்புத மனிதன் தான் என செய்தியாளர்கள் அவரை பாராட்டியுள்ளனர்.