லைவ் வீடியோவில் கண்ணீர் சிந்திய 'அந்நியன்' பட நடிகை சதா… ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அண்டங்காக்கா கொண்டக்காரி எனும் அந்நியன் பாடலுக்கு உற்சாகமான நடனத்தைக் கொடுத்து ரசிகர்கள் மனதில் கெட்டியாக இடம்பிடித்துக் கொண்டவர்தான் நடிகை சதா. இவர் தற்போது கண்ணீர் சிந்திய படியே இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் வார்த்தைகளைக் கூறிவருகின்றனர்.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2002 இல் வெளியான ‘ஜெயம்‘ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர்தான் நடிகை சதா. தொடர்ந்து ‘அந்நியன்‘, ‘உன்னாலே உன்னாலே‘ போன்ற வெற்றிப்படங்களில் நடித்திருந்தார். அதேபோல தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிப் படங்களிலும் கவனம் செலுத்திவந்த அவருக்குப் படவாய்ப்புகள் குறைந்த நிலையில் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து ‘எலி‘ திரைப்படத்திலும் நடித்திருந்தார். அதுவும் வெற்றிப்பெறாத நிலையில் 2014 முதல் பல்வேறு தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் சைவ உணவு மீது அடங்காத ஆர்வம் கொண்ட நடிகை சதா மும்பையில் கடந்த 2019 முதல் ‘எர்த்லிங்ஸ் கஃபே‘ எனும் பெயரில் உணவகம் ஒன்றை நடத்திவந்ததாகக் கூறப்படுகிறது. இந்த உணவகத்தின் உரிமையாளர் சமீபத்தில் உணவகத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியதாகவும் இதை மாற்றுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் என்னால் முடியவில்லை, எனவே அடுத்த மாதத்தில் இருந்து எர்த்லிங்ஸ் கஃபே இங்கு இருக்காது என்று கூறியே நடிகை சதா தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.
வீகன் உணவு மீது அதிக ஆர்வம் கொண்ட நடிகை சதா தனது உணவகத்தில் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் வரைக்கும் செலவிட்டாராம். அதேநேரத்தில் இதுபோன்று நடக்கும் என்று தெரிந்திருந்தால் இதில் முதலீடு செய்திருக்க மாட்டேன் என்று கண்ணீர் மல்கிய படியே தனது ரசிகர்களுக்கு பிரியா விடை கொடுத்திருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள் ஏன்? உணவகத்தை காலி செய்ய வேண்டும். வேறு இடத்திற்கு மாற்ற முயற்சிசெய்யுங்கள்… நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று ஆறுதல் கூறிவருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments