திருமணத்தால் சுதந்திரம் பறிபோகும்? திருமணம் ஆகாத 39 வயது நடிகை பகீர் கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
20 வருடங்களுக்கு மேலாக தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்துவரும் முக்கிய நடிகை ஒருவர் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் நிலையில் திருமணம் செய்துகொண்டால் சுதந்திரம் போய்விடும் என்று தெரிவித்து இருக்கும் கருத்துகள் இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘ஜெயம்’ திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை சதா. ஜெயம் திரைப்படம் தமிழில் 2002 இல் வெளியாவதற்கு முன்பே தெலுங்கில் ‘தேஜா’ எனும் பெயரில் வெளியாகி இருந்தது. அதிலும் நடிகை சதாவே நடிகர் நித்தினுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முக்கிய நடிகைகளுள் ஒருவராக வலம்வந்தார்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் ‘எதிரி‘, ‘வர்ணஜாலம்‘, ‘பிரியசகி’, ‘உன்னாலே உன்னாலே‘, ‘திருப்பதி’ என்று பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார். தமிழைப் போலவே தெலுங்கு, கன்னடம், இந்தி திரைப்படங்களில் இவர் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்து வந்தார். இந்நிலையில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கிய நடிகை சதா பாலியல் தொழிலாளியை முக்கியத்துவப் படுத்தும் கதாபாத்திரத்தில் ‘டார்ச் லைட்’ எனும் திரைப்படத்தை நடித்து தயாரித்து இருந்தார். ஆனால் இந்தத் திரைப்படம் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் கடைசியாக தமிழில் நடிகர் வடிவேலுக்கு ஜோடியாக ‘எலி’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது ஒருசில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துவரும் அவர் வெப் சீரிஸ் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். சினிமாவைத் தவிர இவருக்கு சொந்தமாக உணவகமும் இருக்கிறது.
அந்த வகையில் நடிப்பு, தொழில் என்று பிசியான வாழ்க்கையை வாழ்ந்துவரும் நடிகை சதா 39 வயதான நிலையில் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். அதுகுறித்து கேள்வி எழுப்பிய நிலையில், திருமணம் செய்து கொண்டால் சுதந்திரம் போய்விடும். திருமணம் செய்பவர் ஒருவேளை புரிந்து கொள்ளலாம் அல்லது புரியாமல் இருக்கலாம்.
நான் Wild life –ஐ நேசிக்கிறேன். நான் திருமணம் செய்து கொண்டால் என் ஆசைகளைத் தொடர முடியாமல் போகலாம். இருப்பினும் சில திருமணங்கள் வெற்றியடைவில்லை. பலர் பிரிந்து செல்கின்றனர். அதனால் தான் திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். நடிகை சதா வெளியிட்டு இருக்கும் இந்தக் கருத்துகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகப் பேசப்பட்டு வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments