''பாகுபலி' படத்தின் போஸ்டர் முன் பலி கொடுத்த ரசிகர்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமான ரிலீஸ் ஆன பாகுபலி' படத்தின் முதல் நாள் வசூலே சுமார் ரூ.30 கோடி என கூறப்படும் நிலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்று திரையரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. பிரபாஸ், தமன்னா, சத்யராஜ் நடிப்பும், பிரமாண்டமான போர்க்காட்சிகளும் ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டுபட்டு வருகிறது.
இந்த படத்தின் கிளைமாக்ஸில் வரும் போர்க்காட்சியில் போருக்கு செல்லும் முன் ராணா ஒரு விலங்கை பலி கொடுத்துவிட்டு போருக்கு கிளம்புவார். ஆனால் நாயகன் பிரபாஸ், போருக்காக ஒரு உயிர் பலியாவதை விரும்பாமல், தன்னுடைய கையை வெட்டி அந்த ரத்தத்தை கடவுளுக்கு பலியாக கொடுப்பார். இந்த காட்சி படத்தின் ஹைலைட்டாக இருக்கும் நிலையில், ஐதராபாத் அருகே பிரபாஸின் ரசிகர்கள் இந்த படம் ஓடும் தியேட்டர் முன்பு நிஜமாகவே ஆடு ஒன்றை வெட்டி பலி கொடுத்ததோடு, அதன் ரத்தத்தையும் பாகுபலி' படத்தின் போஸ்டர் மீது தெளித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிரபாஸ், ராணா, தமன்னா, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்துள்ள 'பாகுபலி' திரைப்படத்தின் பிரமாண்டம் குறித்துதான் சமூக வலைத்தளங்களில் பெரும்பாலான டுவீட்டுக்கள் பதிவாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி - ரசிகர்களின் விமர்சனம்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com