டாக்டர் பட்டம் முடித்தும் ரோட்டில் பிச்சையெடுத்த திருநங்கை… அவரது கனவை நனவாக்கிய பெண் காவல் ஆய்வாளர்!!!
- IndiaGlitz, [Tuesday,November 24 2020]
மதுரையில் MBBS பட்டம் முடித்த திருநங்கை ஒருவர் தான் திருநங்கை என்பதை நிரூபிப்பதற்கான சான்றிதழை பெறமுடியாமல் தவித்து வந்து உள்ளார். இதனால் எங்கும் பணியாற்ற முடியாமல் வாழ்க்கையை நடத்துவதற்காக ரோட்டில் பிச்சை எடுத்து வந்திருக்கிறார். இவரது நிலையைப் பார்த்த மதுரை பகுதியில் காவல் ஆய்வாளராக இருக்கும் கவிதா இவரிடம் விசாரணை நடத்தி இருக்கிறார்.
அப்போது திருநங்கையான திலகர் தன்னுடைய அனைத்து சான்றிதழ்களையும் கொடுத்து, தான் ஒரு திருநங்கை. நான் மருத்துவம் படித்து இருக்கிறேன். மேலும் திருநங்கை என நிரூபிக்கும் ஒரு சான்றிதழை பெறமுடியாமல் தவித்து வருகிறேன். சமூகத்திலும் எனக்கு எந்த அங்கீகாரம் இல்லை எனப் புலம்பி இருக்கிறார். அவர் கூறும் தகவல்கள் அனைத்தும் உண்மையாக இருந்த நிலையில் காவல் ஆய்வாளர் கவிதா தன்னுடைய மேலதிகாரிகளிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் சென்று இருக்கிறார்.
திருநங்கையான திலகருக்குத் தேவையான அனைத்து சான்றிதழ்களையும் பெற்றுத் தந்து தன்னுடைய சொந்த செலவிலேயே மருத்துவப் பணியாற்றத் தேவையான உபகரணங்களையும் காவல் துறை அதிகாரிகள் வாங்கிக் கொடுத்து உள்ளனர். மேலும் அப்பகுதியில் ஒரு சிறிய மருத்துவமனையை தொடங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பதாக உத்தரவாதம் அளித்து உள்ளனர். இச்சம்பம்வ குறித்து மதுரை பகுதியில் திருநங்கை மருத்துவர் ஒருவர் இனிமேல் வலம் வரப்போகிறார் என்று காவல் துறை அதிகாரிகள் மகிழ்ச்சியோடு சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.