சச்சினை அவுட் ஆக்கியதால் எனக்கு கொலை மிரட்டல்கள் கூட வந்தது – டிம் பிரெஸ்னன் கருத்து!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய கிரிக்கெட்டின் கனவு நாயகனான சச்சின் டெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் எராளமான ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஒருகாலத்தில் அவரின் 100 ஆவது சதம் எங்கே, எப்படி நிகழும் என அனைவரும் ஆவலருடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டி ஒன்றில் சச்சின் 91 ரன் எடுத்து அவுட் ஆனார். அந்த விக்கெட்டை வீழ்த்தியது இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரெஸ்னன். ஒருவேளை அந்த விக்கெட் விழாமல் இருந்திருந்தால் 100 ஆவது சதத்தை எடுத்து இருப்பதார். பின்னால் அந்த வெற்றியை சச்சின் பெற்றார் என்பது வேறு விசயம்.
ஆனால் 2011 இல் நடந்த சம்பவத்தில் விக்கெட் கீப்பராக இருந்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் ஹில் டக்கர் செய்த காரியம் அன்றைக்கு பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களை கோபப்பட வைத்தது. இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விறுவிறுப்பாக விளையாடிக் கொண்டிருந்தார். அன்றைக்கு அவர் சதம் எடுப்பார். உலகப் பெரும் சாதனையை செய்யப் போகிறார் என்ற ஆர்வத்தில் ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்ப்பார்த்து கொண்டு இருக்கின்றனர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரெஸ்னன் தனது பந்தை வீசுகிறார். அது சச்சினின் பேட்டில் படுகிறது. உடனே LBW கேட்கிறார் டிம் பிரெஸ்னன். விக்கெட் கீப்பர் அவுட் என கையை உயர்த்தி விடுகிறார். ரீக்கேப்பில் அது LBW இல்லை எனத் தெரிகிறது. அவ்வளவுதான் ஒட்டுமொத்த ரசிகர்களும் அப்சட்.
நடந்த தவறுக்கு கோபப்பட்டு விட்டு நகர்ந்து சென்ற ரசிகர்களுக்கு மத்தியில், இது எப்படி நடக்கலாம் என டிம் பிரெஸ்னன் , விக்கெட் கீப்பர் ஹில் டக்கர் என இருவருக்கும் கொலை மிரட்டலுக்கும் விடுக்கப்பட்டு இருக்கிறது. இதைச் சமாளிக்க ஹில் டக்கர் தனி பாடிகார்டையே நியமித்து இருக்கிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள வீட்டிலும் பாடிகார்டு போடப்பட்டு இருக்கிறது. இச்சம்பவத்தைத்தான் இங்கிலாநது வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரெஸ்னன் இப்போது பகிர்ந்து கொண்டு இருக்கிறார். மேலும், “என்னைவிட ஹில் டக்கர்தான் பாவம்” என்ற சுவாரசியத் தகவலையும் அவர் கூறியிருக்கிறார்.
இந்தியக் கிரிக்கெட்டின் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கர் அன்றைக்கு தவற விட்ட தனது 100 ஆவது சதத்தை 2012 இல் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் நிறைவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் இந்திய அணிக்காக முதன்முதலில் 1989 நவம்பர் 15 ஆம் தேதி ஆட ஆரம்பித்தார். அதே ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதியும் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியிருக்கிறார். இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி என இரண்டு முறைகளிலும் இவரே அதிக ரன்களை குவித்த வீரராக அறியப்படுகிறார். டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களையும் 51 சதத்தையும் பெற்று இருக்கிறார். அதேபோல ஒருநாள் போட்டியில் 18,426 ரன்களையும் 49 சதத்தையும் குவித்து இருக்கிறார். இந்தியாவிற்காக 6 உலகக் கோப்பை போட்டிகளில் கலந்து கொண்டிருக்கிறார். 2011 இல் இந்தியா உலகக் கோப்பையை பெற்றதில் இவரின் பங்கு முக்கியம் என்றும் கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout