சச்சின் Vs மெஸ்ஸி…. இத்தனை ஒற்றுமைகளா? ரசிகர்கள் ஆச்சர்யம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் கோபா அமெரிக்க கால்பந்து இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணி கடந்த 28 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக கோப்பையை தட்டிச் சென்றிருக்கிறது. ஒருவேளை இந்தக் கோப்பையை அர்ஜென்டினா நழுவவிட்டு இருந்தால் என்னவாகி இருக்கும்? இதுதான் தற்போதைய கால்பந்து ரசிகர்களிடையே ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.
உலகில் நெம்பர் ஒன் கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியைப் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு கால்பந்து உலகில் கொடிக்கட்டி பறந்துவரும் இவர் தனது சொந்த நாட்டிற்காக ஒருமுறைகூட சர்வதேச கோப்பையை பெற்றுக் கொள்ள முடியவில்லை என கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
ஆனால் கிளப் அணிகளுக்காக பல வெற்றிக் கோப்பைகளை வாங்கி குவித்து இருக்கிறார். அதனால் உலகில் அதிகச் சம்பளம் வாங்கும் ஒரு விளையாட்டு வீரராகவும் இருந்து வருகிறார். கூடவே கால்பந்து விளையாட்டிற்காக பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார். இப்படி ஒட்டுமொத்த உலகமே தூக்கிக் கொண்டாடும் மெஸ்ஸி தனது சொந்த நாட்டுக்காக ஒரு சர்வதேச கோப்பையை பெற்றுக் கொடுக்கவில்லையே என ரசிகர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
இந்த விமர்சனத்தை எதிர்கொள்ள முடியாத மெஸ்ஸி கடந்த 2016 ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணியில் இருந்து விலகிக்கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். இவரது முடிவிற்கு கால்பந்து ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத் தலைவர்களும் வருத்தம் தெரிவித்து இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன்மீது வைக்கப்பட்ட விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் அணியில் இணைந்த மெஸ்ஸி தற்போது கோபா அமெரிக்க கால்பந்து கோப்பையை அர்ஜென்டினா அணிக்கு பெற்றுத் தந்துள்ளார். 34 வயதாகும் மெஸ்ஸி கடந்த 16 ஆண்டுகளாக அர்ஜென்டினா அணிக்காக விளையாடி வருகிறார். ஒருவேளை இந்த கோபா கோப்பையை நழுவவிட்டு இருந்தால் தனது வாழ்நாளில் இதுபோன்ற சாதனையை மெஸ்ஸி மீண்டும் ஒருமுறை செய்திருக்க முடியாது. இதனால் கோபா அமெரிக்க கோப்பையை வென்றது குறித்து ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸிக்கும் இடையே பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன. இந்த ஒற்றுமைகள் குறித்து ரசிகர்கள் கடும் வியப்பை வெளிப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
அர்ஜென்டினா அணி இதற்குமுன்பு கடந்த 1993 ஆம் ஆண்டு கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை வென்றது. பின்னர் 28 வருடம் கழித்து 2021 ஆம் ஆண்டு (தற்போது) மீண்டும் கோப்பையை தட்டிச் சென்றுள்ளது. இதனால் அர்ஜென்டினாவின் 28 வருட கனவு நனவாகி இருக்கிறது.
இதேபோன்ற ஒரு கனவு இந்தியாவில் சச்சின் டெண்டுல்கரால் நிறைவேறி இருக்கிறது. இந்தியக் கிரிக்கெட் அணி கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பையை கைப்பற்றியது. பின்னர் 28 வருடத்திற்குப் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான கிரிக்கெட் அணி மீண்டும் உலகக்கோப்பையை தட்டிச் சென்றது. இந்த உலகக்கோப்பை வெற்றிக்கு சச்சின் முக்கியக் காரணமாக இருந்தார். அந்த வகையில் 28 வருட கனவு இந்தியாவிலும் நிறைவேறியது.
அதோடு சச்சின் கடந்த 2014 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிவிட்டார். தற்போது 34 வயதாகும் மெஸ்ஸி மீண்டும் அமெரிக்க கோபா கால்பந்து போட்டியில் கலந்து கொள்வாரா என்பது சந்தேகம்தான். மற்ற சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்டாலும் கோபா அமெரிக்கா என்பது இயலாத காரியம். அந்த வகையில் சச்சின் மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவருக்கும் ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
இதைத்தவிர சச்சின் மற்றும் மெஸ்ஸி இருவருக்கும் இடையே இன்னொரு ஒற்றுமையும் காணப்படுகிறது. அதாவது இரு ஜாம்பவான்களும் 10 ஆம் நெம்பர் ஜெர்சியை அணிந்து கொண்டுதான் இதுநாள் வரை விளையாடி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சச்சின் ரசிகர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கண்டுபிடித்து சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். அதோடு ஜாம்பவான்களிடம் இதுபோன்ற ஒற்றுமை இருப்பது சகஜம்தான் எனக் கொண்டாடி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout