ரஜினிக்கு தமிழில் டுவிட் போட்டு வாழ்த்திய கிரிக்கெட் கடவுள்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 70 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகினர் உள்பட பல்வேறு துறைகளில் உள்ளவர்களும் தொடர்ச்சியாக இன்று காலை முதல் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
திமுக தலைவர் முக ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சற்று முன்னர் இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ள சச்சின், ‘திரையில் உங்களுடைய ஸ்டைலும் திரைக்கு வெளியே உங்களுடைய மனிதநேயமும் உங்களை ஒவ்வொருவர் தர்பாரிலும் ‘தலைவா’ என நிலைநிறுத்தியுள்ளது’ என்று சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார். சச்சினின் இந்த ட்விட்டிற்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் @rajinikanth Sir.
— Sachin Tendulkar (@sachin_rt) December 12, 2019
Your onscreen style and offscreen humility make you the ‘Thalaiva’ in every ‘Darbar’. pic.twitter.com/cIYZLJcjk9
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com