கமல்ஹாசன் பட பாடலை உதாரணமாக கூறி எஸ்பிபிக்கு இரங்கல் தெரிவித்த சச்சின்!

பிரபல பின்னர் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமண்யம் அவர்களின் மறைவு தமிழகத்தை மட்டுமின்றி இந்தியாவை மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது பாடலுக்கு ரசிகராக இல்லாதவர்களே இல்லை என கூறலாம். அந்த வகையில் இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் அவர்கள் எஸ்பிபி மறைவு குறித்து கூறியதாவது:

’எஸ்பி பாலசுப்பிரமண்யம் அவர்களின் இசையைக் கேட்பது எப்போதும் எனக்கு பிடிக்கும். அவரது மறைவால் ஆழ்ந்த வருத்தம். சாகர் திரைப்படத்தில் இடம்பெற்ற அவருடைய ‘சச் மேரே யார் ஹை’ பாடல் எனது பிளேலிஸ்ட்டில் நான் எப்போதும் வைத்திருக்கும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுகாக நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு சச்சின் தெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்

சச்சின் தெண்டுல்கர் குறிப்பிட்டிருந்த ‘சாகர்’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ரிஷிகபூருடன் நமது உலக நாயகன் கமல்ஹாசன் நடித்திருந்தார் என்பதும், இந்த படத்தில் டிம்பிள் கபாடியா நாயகியாக நடித்திருப்பார் என்பதும், இதே டிம்பிள் தான் தமிழில் கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

மியாண்டட் சிக்ஸ் அடித்த மேட்ச், உலகக்கோப்பை இறுதி போட்டி: எஸ்பிபியின் கிரிக்கெட் நினைவலைகள்!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் ஒரு மிகச் சிறந்த பாடகர், இசையமைப்பாளர் மட்டுமின்றி தீவிரமான, வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர் என்பது பலரும் அறிந்த உண்மை

எஸ்பிபிக்கு அரசு மரியாதை: பிரதமர், முதல்வருக்கு பாரதிராஜா நன்றி!

பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் நம்மை தவிக்கவிட்டு மறைந்துவிட்ட நிலையில் அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும்

இன்றைய உலக சாம்பியனுக்கு அன்றே ஸ்பான்சர் செய்த எஸ்பிபி!

இன்று உலக அளவில் சாம்பியன் பட்டம் பெற்று உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர் ஒருவருக்கு முதல் முதலில் ஸ்பான்சர் செய்தது எஸ்பிபி அவர்கள்தான் என்ற தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது 

காவல்துறை மரியாதையுடன் எஸ்பிபி உடல் நல்லடக்கம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் உடல் இன்று தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் முற்பகல் 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

கொரோனா குறித்து கடைசி மேடையில் பேசிய எஸ்பிபி! வைரலாகும் வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று உடல்நலக் குறைவால் காலமான நிலையில் அவருடைய மறைவு செய்தி கேட்டு இந்திய திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்தது.