தத்தெடுத்த கிராமத்திற்கு சென்று பொதுமக்களை உற்சாகப்படுத்திய சச்சின் தெண்டுல்கர்

  • IndiaGlitz, [Tuesday,December 19 2017]

பாரத பிரதமர் நரேந்திரமோடியின் திட்டங்களில் ஒன்றாகிய எம்.பி.க்கள் கிராமத்தை தத்தெடுக்கும் திட்டத்தின் கீழ், முன்னாள் கிரிக்கெட் வீரரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான சச்சின் டெண்டுல்கர், மகாராஷ்டிர மாநிலத்தின் ஒஸ்மானாபாத் மாவட்டத்தில் உள்ள தோஞ்சா என்ற கிராமத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தத்தெடுத்தார் என்பது தெரிந்ததே. சச்சின் இதற்கு முன்னரே ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த புத்தம்ராஜு கன்ட்ரிகா என்ற கிராமத்தை தத்தெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தோஞ்சா கிராமத்தின் மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.4 கோடியை, நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து சச்சின் வழங்கியுள்ளார். இந்த பணத்தின் மூலம் தோஞ்சா கிராமத்தில் புதிய பள்ளிக் கட்டடம், ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் வழங்கக் கூடிய நீர் விநியோகத் திட்டம், கான்கிரீட் சாலைகள், கழிவுநீர் குழாய்கள், கழிப்பறை கட்டுமானம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இக்கிராமத்தின் தெருக்களில் சோலார் மின்விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த கிராமமே இரவிலும் ஜொலிக்கின்றது

இந்த நிலையில் சச்சின் தெண்டுல்கர் சமீபத்தில் இந்த கிராமத்திற்கு வருகை தந்து பணிகள் அனைத்தும் முடிவடைந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தார். அவருக்கு மாவட்ட நீதிபதி மற்றும் ஆட்சித்தலைவர் சிறப்பான வரவேற்பை அளித்தனர். மேலும் இந்த கிராமத்து சிறுவர்களுடன் சச்சின் சில நிமிடங்கள் கிரிக்கெட் விளையாடி அவர்களை மகிழ்ச்சிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தோஞ்சா கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய சச்சின், 'இந்த கிராமத்து மக்களின் உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியின் உதவியுடன் இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்தையும் செய்ய முடியும் என்று நாம் நம்புகிறேன். ஆரம்பகாலத்தில் ஒருசில சவால்கள் இருந்தபோதிலும், அவற்றை வெற்றிகரமாக கடந்து தற்போது உத்வேகத்துடன் செயல்பட்டு கிராம முன்னேற்றத்திற்கு அனைவரும் பாடுபடுவோம். இந்த தோஞ்சா கிராமம் நாட்டில் உள்ள மற்ற கிராமங்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்க  வேண்டும் என்பதே நமது விருப்பம்

 

 

More News

பிட்காயினில் முதலீடு செய்தவர்களுக்கு நோட்டீஸ்: வருமான வரித்துறை அதிரடி

கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் உள்ள ஊடகங்களில் தலைப்பு செய்தி ஆகிவருவது பிட்காயின். இந்தியாவை பொறுத்தவரையில் பொருளாதார அறிவு பெற்றவர்கள் கூட பிட்காயின் குறித்து தெரியாத நிலை

த்ரிஷா வழங்கும் கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் விருந்து

கோலிவுட் திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான த்ரிஷா, தற்போது இளம் நடிகைகளுக்கு இணையாக பிசியாக ஒரே நேரத்தில் 6 படங்களில் நடித்து வருகிறார். அவற்றில் ஒன்று த்ரில் படமான 'மோகினி

அருவியும் ஆஸ்மாவும் ஒரே கதையா?

கடந்த வாரம் வெளியான 'அருவி' திரைப்படத்தில் எந்த தவறும் கண்டுபிடிக்க முடியாமல் முழுக்க முழுக்க பாசிட்டிவ் விமர்சனங்களை ஊடகங்கள் கொடுத்து கொண்டிருக்கும் நிலையில்

அது முழுக்க முழுக்க என்னோட தவறுதான்: ஆர்.ஜே.பாலாஜி கூறியது எதை தெரியுமா?

காமெடி நடிகர் ஆர்.ஜே. பாலாஜி திரையில் தான் காமெடி நடிகர், ஆனால் நிஜத்தில் ஒரு பொருப்புள்ள சமூகநல சிந்தனையாளர் என்பது பல நேரங்களில் தெரியவந்துள்ளது

'ஐஸ் அவுஸ் டு ஒயிட் அவுஸ்' நிகழ்ச்சியின் நோக்கம் என்ன? ஆர்.ஜே.பாலாஜி

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராகிய ஆர்.ஜே.பாலாஜி வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அமெரிக்காவில் காமெடி ஷோ ஒன்றை நடத்துகிறார்.