உயிரைக் காப்பாற்றிய டிராபிக் போலீஸ்க்கு நன்றி தெரிவித்த சச்சின்…நடந்தது என்ன?

இந்தியக் கிரிக்கெட்டில் ஜாம்பவனாகத் திகழ்ந்த சச்சின் டெண்டுல்கர், போக்குவரத்து காவலர் ஒருவரை நேரில் சென்று நன்றி கூறியதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியக் கிரிக்கெட் அணி கேப்டன்சி குறித்தும் இந்த விவகாரத்தில் பிசிசிஐயின் போக்கு குறித்தும் ரசிகர்களுக்கு பல்வேறு குழப்பங்கள் நீடித்து வருகின்றன.

இந்நிலையில் இந்தியக் கிரிக்கெட் அணியின் அசைக்க முடியாத ஆணிவேராக செயல்பட்ட சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் போக்குவரத்து காவலர் ஒருவருக்கு நன்றி தெரிவித்து இருப்பது மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் நல்ல வேளையாக சச்சினின் நெருங்கிய தோழி ஒருவருக்கு சாலை விபத்து ஏற்பட்டதாகவும் அந்த விபத்தின்போது அவருடைய முதுகெலும்பு படு மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதை உணர்ந்த ஒரு போக்குவரத்து காவலர் அவரை ஆடாமல் அசையாமல் மருத்துவமனையில் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அந்த பெண் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு தற்போது உயிர் காப்பாற்றப்பட்டு இருக்கிறார். இந்த நிகழ்வை குறித்துத்தான் சச்சின் பேசியிருக்கிறார். மேலும் அந்த போக்குவரத்து காவலரை நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்ததாகக் கூறிய அவர், இதுபோன்ற அழகான மனிதர்களால் தான் உலகம் நிறைந்துள்ளதாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் உயிரைவிட பணமும் நேரமும் பெரியது அல்ல என சச்சின் டெண்டுல்கர் போக்குவரத்து விதிமுறைகளைக் குறித்து பேசியிருப்பது சோஷியல் மீடியாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதேசமயம் தக்க சமயத்தில் பெண் ஒருவருக்கு உதவிய போக்குவரத்து காவலருக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.