சச்சினுக்கு 12ஆம் வகுப்பு மாணவி எழுதிய நெகிழ்ச்சியான கடிதம்

  • IndiaGlitz, [Friday,June 09 2017]

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சினை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. எதிரி நாட்டு வீரர்களுக்கு, ரசிகர்களுக்கும் கூட சச்சினின் பேட்டிங் ஸ்டைல் பிடிக்கும். இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சச்சினுக்கு ஒரு ரசிகையாக நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு செய்துள்ள சச்சின், 'உங்களை போன்ற ரசிகர்களால் தான் நான் இன்னும் சிறப்பாக செயல்பட உதவி செய்கிறார்கள், நன்றி' என்று தெரிவித்துள்ளார். அந்த ரசிகையின் கடிதத்தில் உள்ளது இதுதான்:

இந்தக் கடிதத்தை எவ்வாறு ஆரம்பிப்பது என்றே எனக்கு தெரியவில்லை. ஏன் என்றால் இந்த கடிதம் என்னை மிகவும் ஈர்த்த கிரிக்கெட் கடவுள் ஒருவருக்கு எழுத உள்ளேன். இந்த கடிதம் உங்கள் கைக்கு கிடைக்குமா? என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இல்லை எனினும் நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். எனது பெயர் அஞ்சனா நான் கேரளாவில் 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருகிறேன். . நீங்கள் கிரிக்கெட் விளையாடும் காலத்தில் நானும் பிறந்திருக்கிறேன் என்பதை நினைத்து பெருமை கொள்கிறேன். நீங்கள் விளையாடிய போட்டிகளை வெறும் கிரிக்கெட் போட்டிகளாக நான் பார்க்கவில்லை, அவை அனைத்தும் பேட்டால் எழுதப்பட்ட கவிதைகள்.

நாங்கள் உங்களை நேசிப்பது உங்களது திறமைக்காக மட்டுமல்ல, உங்களுடைய குணத்திற்கும் சேர்த்துதான். உங்களை பலர் மகனாகவும், சகோதரர்களாகவும், தோழனாகவும் பார்க்கின்றார்கள். நீங்கள் அனைவராலும் ஆசிர்வதிக்கப்பட்டவர். ஃபேஸ்புக்கில் உங்கள் அபிமானிகள் பலர் உங்களுக்கு கடிதம் எழுதியதை பார்த்தவுடன் தான் எனக்கும் உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என்ற யோசனை வந்தது. எனக்கு உங்களது முகவரியை வழங்கிய கூகுளுக்கு எனது நன்றி

உங்களுக்கு கடிதம் எழுதுவது போல் பலமுறை கனவு கண்டுள்ளேன், ஆனால் இப்போது அது உண்மையாகியுள்ளது. உங்களிடம் இந்த கடிதம் மூலம் நிறைய கூற விரும்புகிறேன். ஆனால் எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

நீங்கள் கேரளா வந்தால் எனது வீட்டுக்கு வந்து எனக்கு ஆட்டோகிராப் போட்டு தர வேண்டும். அது எங்களுக்கு பெருமையாக இருக்கும். உங்களை இதுவரை நான் நேரில் பார்த்ததில்லை. ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிதான் உங்களை பார்த்துள்ளேன். உங்களை நேரில் காண வேண்டும் என்பது எனது ஆயுட்கால கனவு. உங்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், நீடூடி வாழ வாழ்த்துக்கள்

இவ்வாறு அஞ்சனா என்ற அந்த மாணவி சச்சினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

More News

சிவகார்த்திகேயன் - பொன்ராம் படம் தொடங்கும் தேதி?

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கி வந்த 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதையும், இந்த படத்தின் பேட்ச்வொர்க் மட்டுமே இன்னும் 10 நாட்களுக்கு உள்ளது என்பதையும் நேற்று பார்த்தோம்.

திமுக எம்.எல்.ஏக்கள் திடீர் கைது! அரசு விழாவில் பங்கேற விடாமல் செய்த போலீசார்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்ட விழாவில் பங்கேற்க முயன்ற திமுக எம்.எல்.ஏக்களை கைது செய்து அந்த விழாவில் பங்கேற்க விடாமல் செய்த புதுக்கோட்டை போலீசாரின் நடவடிக்கையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

பான் எண்ணுடன் ஆதார் இணைப்பு. சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

வங்கிக்கணக்கு, ரேசன் கார்டு, கேஸ் இணைப்பு உள்பட பல்வேறு ஆவணங்களுடன் ஆதார் அட்டையை இணைக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன.

டெல்லியை அடுத்து சென்னை: ஒருமாத போராட்டத்தை தொடங்கினார் அய்யாக்கண்ணு

தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சமீபத்தில் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 41 நாட்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை கடைசி வரை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில் சென்னை திரும்பிய விவசாயிகள் இன்று முதல் ஒரு மாத போராட்டத்தை சென்னையில் தொடங்கியுள்ளனர்...

ஆபத்தானவர் பட்டியலில் வைகோ! நாட்டிற்குள் நுழையவும் தடை: மலேசியா அதிரடி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பது அனைவரும் அறிந்ததே. மேலும் அவர் மீது இந்தியாவிலும் இலங்கையிலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது...