close
Choose your channels

சச்சின் செய்யும் அசத்தல் பாராசைலிங்… லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த வீடியோ!!!

Friday, December 11, 2020 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சச்சின் செய்யும் அசத்தல் பாராசைலிங்… லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த வீடியோ!!!

 

கொரோனா காலத்தில் பிரபலங்களும் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அப்படி கொரோனா காலத்தில் வீட்டிற்குள்ளேயே இருந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்தார். பல விழிப்புணர்வு வீடியோக்கள் மற்றும் சமையல் குறிப்புகளையும் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில் பதிவிட்டு வந்தார். தற்போது ஊரடங்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டு உள்ள நிலையில் தனது குடும்பத்தினருடன் சச்சின் சுற்றுலா சென்றிருக்கிறார். அந்த வகையில் தற்போது சுற்றுலா புகைப்படங்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில் ஒரு வீடியோ கடலின் நடுவே சச்சின் பாராசைலிங் (Parasailling) செய்வது போல படு திரில்லாக இருக்கிறது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ள இந்த வீடியோவிற்கு பின்னால் ஹிந்தி பாடகரான ரிட்விட்ஸ் பாடிய hum toh udd gaye பாடல் வரிகள் கேப்ஷன் ஆக பதிவிடப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். மேலும் god of cricket we love u, we miss u போன்ற கமெண்டுகளையும் பதிவிட்டு உள்ளனர்.

அதோடு சச்சின் வெளியிட்ட மற்றொரு பதிவில் vacation vibes என கேப்ஷனிட்டு தனது மகனுடன் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இன்னொரு வீடியோவில் சச்சின் சைக்கிளிங் செய்கிறார். அடுத்து நீச்சல் குளத்தில் இருக்கும் மற்றொரு புகைப்படமும் ரசிகர்களை அதிகளவு கவர்ந்து வருகிறது. தனது 25 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் இருந்து சச்சின் கடந்த 2013 ஆம் ஆண்டு முழுமையாக ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்றப்பின்பு கிரிக்கெட் தொடர்பான விவாதங்கள், ஆலோசனைகள் போன்றவற்றில் முழுமையாக பங்கெடுத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment