close
Choose your channels

சச்சினைக் குறித்து இணையத்தில் வைரலாகும் ஒரு ஹேஷ்டேக்! ரசிகர்கள் யார் பக்கம்?

Saturday, February 6, 2021 • தமிழ் Sport News Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


 

சமூக வலைத்தளத்தில் சச்சினுக்கு ஆதரவாக #IStandWithSachin என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருகிறது. காரணம் நேற்று முதல் சச்சின் சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகி வருகிறார். இந்த விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும் சச்சின் டெண்டுல்கர் என்ற பிம்பம் இந்தியாவிற்காக பட்ட கஷ்டங்களை ரசிகர்களுக்கு நினைவூட்டும் விதமாகவும் சிலர் இந்த ஹேஷ்டேக்கை வைரலாக்கி வருகின்றனர்.

முன்னதாக விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துப் பதிவிட்ட பாப் பாடகி ரிஹானாவிற்கு பதிலடி கொடுத்து இருந்தார் சச்சின் டெண்டுல்கர். அவருடைய டிவிட்டர் பதிவில், தேச இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும். இது உள்நாட்டு பிரச்சனை என்ற ரீதியில் கருத்து பதிவிட்டு இருந்தார்.

சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து இந்தக் கருத்தை எதிர் பார்க்காத இந்தியக் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் அவருடைய கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதன் வெளிப்பாடாக 5 வருடங்களுக்கு முன்பு தாங்களே திட்டித் தீர்த்த முன்னணி டென்னிஸ் வீராங்கனையான மரிய ஷரபோவேவிடம் கூட நெட்டிசன்கள் நேற்று மன்னிப்பு கோரினர்.

காரணம் கடந்த 2015 ஆம் ஆண்டு “சச்சின் என்றால் யார் என்றே தெரியாது“ என மரியா கூறி இருந்தார். இந்த ஒற்றை வார்த்தைக்கு மரியாவை கடிந்து கொண்ட நெட்டிசன்கள் தற்போது சச்சின் மீது கொண்டிருக்கும் கோபத்தின் காரணமாக மரியாவிடம் மன்னிப்பு கோரி வருகின்றனர். மேலும் உங்களுக்கு சச்சினை பற்றி அப்போதே தெரிந்து இருக்கிறது எனச் சில நெட்டிசன்கள் விளக்கமும் அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சச்சினுக்கு ஆதரவாக #IStandWithSachin என்ற ஹேஷ்டேக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் “வெறுப்பை உதறுங்கள், சச்சினுக்கு உதவ கரம் கோர்ப்போம்” எனவும் 24 ஆண்டுகளாக ரசிகர்களின் எதிர்ப்பார்ப்புகளை தோளில் சுமந்தவர் அவர், பாரத ரத்னா பெற்ற ஒருவரை இப்படி இழிவுப்படுத்தலாமா எனவும் சிலர் பதிவிட்டு உள்ளனர்.

இன்னும் ஒருபடி மேலே போய் ஒரு சிலர் சச்சின் மீது கொண்டு உள்ள அதீதப் பற்றால் சச்சின் வாழும் நாட்டில் இந்தியக் குடிமகனாக இருக்கப் பெருமைப்படுகிறோம் என்றும் பதிவிட்டு உள்ளனர். இன்னொரு பதிவில், உலகம் சச்சினுக்கு எதிராக இருந்தால் நான் உலகத்துக்கு எதிராக மாறுவேன் என்றும் தன்னுடைய உச்சப்பட்ச அன்பை பொழிந்து இருக்கிறார். 

Person who carried billion expectations on his shoulders for 24 years !
The one who has given us happiness during difficult times I Support him will forever support him @sachin_rt #IStandWithSachin pic.twitter.com/AfYlFcubV8

— Sneha???? (@Shinde25sneha) February 5, 2021

Time To Show Our Love & Respect To Our Beloved Indian Player ????

Vote Now ⬇️ https://t.co/RnwKCgZJKP

— ???????? ?????????????? ???? ✯ (@PSPKRampageFC) February 4, 2021

If Sachin have millions fans, I am one of them.
If Sachin have 10 fans, I am one of them.
If Sachin have 1 fan, that's me.
If Sachin have no fans, it means I am no longer on earth.

If World is against @sachin_rt, then I am against the World!!#IStandWithSachin Forever & Ever ✊ pic.twitter.com/OfLP4ibQJy

— V I S H A L ???? (@Vishal_SRT10) February 5, 2021

Legend on and off the field#IStandWithSachin pic.twitter.com/OwtmpyYRyR

— Mumbai Indians FC (@FanaticsOfMI) February 5, 2021

Some Outstanding Work by Sachin Tendulkar !! Must See??

Do You Know in 2018, Sachin Tendulkar donated his Entire RAJYA SABHA SALARY & ALLOWANCE to PM Relief Fund❤️@sachin_rt sanctioned 185 projects across the Nation in his RS term.@CrickeTendulkar #IStandWithSachin pic.twitter.com/RNFC61c1hK

— Sachin Tendulkar???? Fan Club ???? (@CrickeTendulkar) February 5, 2021

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment