பெண்கள் சலூனில் ஷேவிங் செய்த சச்சின் தெண்டுல்கர்

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒருவர் சலூன் கடை நடத்தி வந்தார். ஆனால் திடீரென ஒருநாள் அவர் எதிர்பாராதவிதமாக மரணம் அடைந்துவிட்டார். அவருக்கு இரண்டு மகள்கள் மட்டுமே இருந்ததால் அவருக்கு பின் அந்த சலூனை யார் நடத்துவது என்ற கேள்வி எழுந்தது

இந்த நிலையில் தந்தையின் மரணத்திற்கு பின்னர் அந்த சலூனை ஏற்று நடத்த அவரது இரண்டு மகள்களான நேஹா மற்றும் ஜோதி முடிவு செய்தனர். முறையான பயிற்சி பெற்று பின்னர் அந்த சலூனை அவர்கள் நடத்தி வந்தனர். இதுகுறித்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது

இந்த செய்தியை பார்த்த சச்சின் தெண்டுல்கர், அந்த இரண்டு பெண்களையும் ஊக்குவிக்கும் வகையில் அவர்களை நேரில் சந்தித்து பாராட்டினார். அதுமட்டுமின்றி சச்சின் டெண்டுல்கர் அந்த கடையில் ஷேவிங்கும் செய்துக்கொண்டார். மேலும் தனக்கு அந்த பெண் ஷேவிங் செய்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் சச்சின் பகிர்ந்துள்ளார், இந்த புகைப்படம் லட்சக்கணக்கான லைக்ஸ்களை பெற்றுள்ளது