டிராபிக்கில் மாட்டிக்கொண்டு லூட்டி அடித்த கிரிக்கெட் ஜாம்பவான்… வைரலாகும் வீடியோ!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாகக் கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் சாலை பயணத்தில் செய்த அதிரடியான செயல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பல வருடங்கள் ஆனாலும் தொடர்ந்து கிரிக்கெட்டின்மீது ஆர்வம் கொண்டிருக்கும் சச்சின் தற்போது 15 ஆவது ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மென்ட்ராக செயல்பட்டு வருகிறார். அதற்கான பணியில் ஈடுபட்டுவரும் அவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி மும்பை அணியின் விக்கெட் கீப்பிங் கோச் கிரண் மோருடன் சாலை வழியாகச் பயணம் செய்துள்ளார். இந்தப் பயணத்தின்போது டிராபிக்கில் மாட்டிக்கொண்ட சச்சின் பிரபலமான மராத்தி பாடல் ஒன்றைக் கேட்டுக்கொண்டே பயணம் செய்திருக்கிறார்.

மேலும் “மி டோல்கரா தர்யாச்சா ராஜா“ எனப்படும் அந்த பாடலுக்கு சச்சின் தனக்கே உரித்தான பாணியில் தனது உடலை அசைத்து சிறிய நடன அசைவுகளையும் வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கிரிக்கெட் களத்தில் பவுலர்களை தெறிக்கவிட்ட ஜாம்பவான் சச்சின் தற்போது குஷியாக காருக்குள் அமர்ந்து கொண்டு மராத்தி பாடலுக்கு நடனம் ஆடிய இந்தக் காட்சிகள் ரசிகர்களை ஆச்சர்யத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.