மகனுக்கு முடிதிருத்தம் செய்த சச்சின் தெண்டுல்கர்: வைரலாகும் வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்த கொரோனா விடுமுறை பலருக்கு பல்வேறு பாடங்களை கற்றுக் கொடுத்துள்ளது என்பதும் இதுவரை செய்யாத வேலைகளைக்கூட பலரை செய்ய வைத்துள்ளது என்பது தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் செய்தியை பார்த்து வருகிறோம்.
குறிப்பாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு காரணமாக முடி திருத்தம் நிலையங்கள் மூடப்பட்டு உள்ளது என்பதும் இன்று வரை அவை திறக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த இரண்டு மாதங்களாக முடி வெட்டாமல் இருந்த பலர் தங்களுக்கு தாங்களே முடி வெட்டிக் கொள்வதும், தங்கள் குடும்பத்தினருக்கும் முடிதிருத்தம் செய்து வருவதுமான வீடியோக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதற்கு திரையுலக நட்சத்திரங்களும் விளையாட்டு நட்சத்திரங்களும் விதிவிலக்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு முடிதிருத்தம் செய்துள்ளார்.இதுகுறித்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். சச்சினின் முடிதிருத்தும் பணிக்கு அவர்கள் மகள் சாராவும் உதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இது குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறியபோது, இந்த கொரோனா விடுமுறையில் குழந்தைகளுடன் விளையாடுவது, ஜிம்மில் அவர்களுடன் உடற்பயிற்சி செய்வது ஆகியவற்றோடு தற்போது முடி திருத்தம் பணியையும் கற்றுக்கொண்டேன். எனது மகன் முடி திருத்தம் செய்தவுடன் ஹேண்ட்சமாக உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com