ஆக்சிஜன் வாங்க ரூ.1 கோடி நிதியுதவி செய்த இந்திய கிரிக்கெட் வீரர்!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் கொரோனா வைரசால் பாதிக்கப்படுபவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் போது அவர்களுக்கு முதலில் செலுத்த வேண்டிய ஆக்ஸிஜன் பல மருத்துவமனைகளில் பற்றாக்குறையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்தியாவுக்கு ஆக்சிஜன் வாங்க உலக நாடுகள் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. அதுமட்டுமின்றி இந்தியாவில் உள்ள தொழில் அதிபர்கள் டாடா, அம்பானி உள்பட பலரும் திரையுலகினரும், விளையாட்டு வீரர்களும் ஆக்சிஜன் வாங்குவதற்காக தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் தற்போது சச்சின் டெண்டுல்கர் ஆக்சிஜன் வாங்குவதற்காக ரூபாய் ஒரு கோடி நிதியுதவி அளித்துள்ளார். அனைவருக்கும் ஆக்சிஜன் கிடைக்க வேண்டும் என்பதற்காக செயல்பட்டுவரும் ’மிஷன் ஆக்சிஜன்’ என்ற அமைப்பிற்கு அவர் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததாகவும் அந்த பணத்தின் மூலம் ஆக்சிஜன் வாங்கி பொதுமக்களுக்கு மிஷன் ஆக்சிஜன் அமைப்பு வழங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’பொதுமக்கள் ஆக்சிஜன் இல்லாமல் தவிப்பதை பார்த்து மனம் வலிக்கிறது என்றும் 250க்கும் அதிகமான தொழில்முனைவோர்கள் கொண்ட குழு ’மிஷன் ஆக்சிஜன்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி நடத்தி வருவதாகவும் அவர்கள் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைக்கு ஆக்சிஜன் சப்ளை செய்து வருவதாகவும் அதில் நானும் பங்காற்றியுளேன் என்றும் தெரிவித்துள்ளார். இந்த அமைப்பின் முயற்சியில் விரைவில் இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சென்றடையும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்

மேலும், ‘நான் விளையாடும் போது நீங்கள் அளித்த ஆதரவு விலை மதிப்பற்றது என்றும் அது எனக்கு வெற்றி பெற உதவியது என்றும், அதேபோல் இன்று இந்த தொற்றுநோயை எதிர்த்துப் போராட கடுமையாக உழைக்கும் அனைவரின் பின்னால் நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.