சென்னை நபரை வலைவீசி தேடும் சச்சின்: தமிழில் பதிவு செய்த டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஓட்டல் ஊழியரை சந்திக்க விரும்புவதாகவும் அவரை கண்டுபிடிக்க தனக்கு உதவி செய்யும்படியும் சச்சின் டெண்டுல்கர் தமிழில் டுவீட் ஒன்றை பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கிரிக்கெட் வீரர்கள் அவ்வப்போது தமிழில் டுவீட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக ஹர்பஜன்சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றதில் இருந்து தமிழில் அவ்வப்போது டுவீட் செய்து அசத்தி வருகிறார்
இந்த நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து சொல்ல முதல் முறையாக தமிழில் டுவிட் செய்த சச்சின் டெண்டுல்கர், தற்போது மீண்டும் ஒரு ட்வீட்டை தமிழில் பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது: எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன. சென்னை டெஸ்ட் தொடரின் போது தாஜ் கோரமண்டல் ஊழியர் ஒருவர் என்னுடைய எல்போ கார்டு பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன். அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன், கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
சச்சினின் இந்த டுவிட்டுக்கு பெரும்பாலானோர் வரவேற்பு தெரிவித்திருந்த போதிலும் ஒரு சிலர் ’இந்த தகவலை நீங்கள் பெற நேரடியாக தாஜ்மஹால் தாஜ் கோரமண்டல் ஓட்டலுக்கே போன் செய்து கேட்டு இருக்கலாம் என்றும் டுவிட்டரில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை’ என்றும் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில் சச்சினின் இந்த தமிழ் டுவீட் இணையதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது மட்டும் உண்மையானது ஆகும்
எதிர்பாராத சந்திப்புகள் சில சமயம் மறக்க முடியாத தருணங்களாக மாறுகின்றன
— Sachin Tendulkar (@sachin_rt) December 14, 2019
சென்னை டெஸ்ட் தொடரின் போது
Taj Coromandel ஊழியர் ஒருவர் என்னுடைய Elbow Guard பற்றி கூறிய ஆலோசனைக்குபின் அதன் வடிவத்தை மாற்றினேன்
அவரை சந்திக்க ஆசைப்படுகிறேன்,கண்டுபிடிக்க எனக்கு நீங்கள் அனைவரும் உதவ வேண்டும்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments