கடவுளே எனக்கு பதில் அளித்துவிட்டார்: ஹரிஷ் கல்யாண் உற்சாகம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்று அதன் பின்னர் திரையுலகில் தொடர் வெற்றியை பெற்று வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’தாராளப் பிரபு’ திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது பிறந்தநாளை கொண்டாடிய போது நடிகர் ஹரீஷ் கல்யாண் தனது சமூக வலைப்பக்கத்தில் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். சச்சின் அவர்கள் கிரிக்கெட் வீரர் மட்டுமின்றி பல இதயங்களை வென்று, சரித்திரம் படைத்தவர். என் குழந்தைப் பருவத்தில் இருந்து நான் அவரை கடவுளை பார்த்து வருகிறேன். நீங்கள் இந்தியாவிற்காக விளையாடுவதை மீண்டும் நாங்கள் பார்க்க விரும்புகிறேன்’ என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் ஹரீஸ் கல்யாணின் இந்த பதிவுக்கு சச்சின் டெண்டுல்கர் ’நன்றி’ என பதில் அளித்துள்ளார். இதனை அடுத்து ’கடவுளே எனக்கு பதில் அளித்துவிட்டார்’ என்றும் இதைவிட வேறு என்ன வேண்டும் என்றும், தனது கனவு நனவாகிவிட்டது என்றும் ஹரிஷ் கல்யான் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று உள்ளார்.
To the man who isn’t just a cricketer to me, you conquered many hearts, made history & been a part of my childhood/teenage infact most part of my life .. Can’t thank you enough my god @sachin_rt Happy birthday. I still wish we could see you playing for India. #SachinTendulkar pic.twitter.com/GBACaj0wCV
— Harish kalyan (@iamharishkalyan) April 24, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com