சச்சின் படத்திற்கு கிடைத்த இரண்டு விருதுகள்: இயக்குனர் பெருமிதம்

  • IndiaGlitz, [Wednesday,January 24 2018]

இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படமான 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்; என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்றது. கிரிக்கெட் விளையாட்டே இல்லாத நாடுகளில் கூட இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

இந்த நிலையில் விளையாட்டை மையமாக வைத்து உலக அளவில் உருவாகும் படங்களுக்கு விருது வழங்கும் விழா ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்றது. இந்த விழாவில் சச்சின் படத்திற்கு சிறந்த இயக்குனர், சிறந்த படம் ஆகிய இரு விருதுகள் வழங்கப்பட்டன.

சிறந்த இயக்குனருக்காக விருதை இயக்குனர் ஹெல்மர் ஜேம்ஸ் எர்ஸ்கின் அவர்களும், சிறந்த படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ரவி பக்ச்சாண்ட்கா அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

இந்த படத்திற்கு விருது கிடைத்தது குறித்து இயக்குனர் ஹெல்மர் ஜேம்ஸ் எர்ஸ்கின் கூறும்போது, ‘இந்தியாவின் கிரிக்கெட் ஜாம்பவான் பற்றிய கதையில் என்னுடைய பணி உலகளவில் பாராட்டப்பட்டதற்கு பெருமை படுகிறேன். இந்த படத்தின் ஸ்கிரிப்டுக்கு சச்சின், அவரது குடும்பத்தினர் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் பலரும் உதவி புரிந்தார்கள். உலகளவில் இதற்கு அங்கீகாரம் கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.

இதே விழாவில் சல்மான்கானின் 'சுல்தான்' படத்திற்கும் மூன்று விருதுகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்தாரா சங்கராச்சாரியர்?

தமிழ்-சமஸ்கிருத அகராதி நூல் வெளியீட்டு விழாவில் தமிழக கவர்னர் பன்வாரிலால் , எச்.ராஜா, பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜன், மற்றும் காஞ்சி சங்கராச்சாரியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

அரசாள்பவர் கேட்டால்தானே! பஸ் கட்டண உயர்வு குறித்து கமல்

நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி தனிக்கட்சி தொடங்கி தீவிர அரசியலில் குதிக்கவுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக அவர் இதுகுறித்து தனது ரசிகர்களிடம் ஆலோசனை செய்து வருகிறார்

பிரதமர் மோடியின் ஆங்கில உச்சரிப்பை கிண்டல் செய்த டிரம்ப்

குஜராத் முதல்வராக இருந்தபோது அமெரிக்காவுக்கு மோடி நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய பிரதமராக அதே மோடி பொறுப்பேற்றபோது அமெரிக்கா மோடியை சிவப்புக்கம்பளத்துடன் வரவேற்பு அளித்தது.

அமெரிக்கா, கனடாவுக்கு விடுத்த சுனாமி எச்சரிக்கை வாபஸ்

அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா அருகே இன்று உள்ளூர் நேரப்படி அதிகாலையில் 8.1 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

தமிழக அரசை கிண்டல் செய்த இசையமைப்பாளர் டி.இமான்

கோலிவுட் திரையுலகில் பிரபல இசையமைப்பாளர் டி.இமான் அவர்கள் 100 படங்களுக்கு இசையமைத்திருக்கும் நிலையில் இமான்100' என்ற நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.