இணையத்தை கலக்கும் சச்சினின் நள்ளிரவு வீடியோ

  • IndiaGlitz, [Tuesday,April 17 2018]

இந்தியாவின் கிரிக்கெட் கடவுள் சச்சினின் நள்ளிரவு வீடியோ ஒன்று கடந்த சில மணி நேரங்களாக இணையத்தை கலக்கி வருகிறது.

மும்பையில் சமீபத்தில் சச்சின் நள்ளிரவு நேரத்தில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது பிசியான சாலையில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது உடனே காரை நிறுத்திய சச்சின் அவர்களுடன் கிரிக்கெட் விளையாடினார். 

இதுகுறித்து வீடியோதான் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சச்சின் வெறும் ஐந்து பந்துகள் மட்டுமே பேட்டிங் செய்தார். அதற்குள் கூட்டம் கூடிவிடவே உடனே அங்கிருந்தவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டு, ஆட்டோகிராபில் கையெழுத்து போட்டுவிட்டு கிளம்பி சென்றார். சச்சின் கொடுத்த இந்த சர்ப்ரைஸ் விசிட் அந்த சிறுவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.