விவசாயிகள் போராட்டம்: ரிஹானாவுக்கு பதிலடி கொடுத்த சச்சின், லதா மங்கேஷ்கர்!

  • IndiaGlitz, [Thursday,February 04 2021]

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து நேற்று பாப் பாடகி ரிஹானா டுவிட் ஒன்றை பதிவு செய்தார். அதில், ‘நாம் ஏன் இன்னும் விவசாயிகள் போராட்டம் குறித்து கேள்வி கேட்காமல் இருக்கிறோம்? என அவர் பதிவு செய்த ட்வீட் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் ரிஹானாவின் ட்விட்டிற்கு தற்போது சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர் உள்பட ஒரு சில பிரபலங்கள் பதிலடியாக தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர். இது குறித்து சச்சின் டெண்டுல்கர் தனது டுவிட்டரில் கூறியதாவது: இந்தியாவின் பிரச்சனைகளில் வெளிநாட்டவர் தலையிடுவது அவசியம் இல்லை என்றும் வெளிநாட்டவர் பார்வையாளர்களாக மட்டும் இருந்தால் போதும் என்றும் இந்தியாவின் இறையாண்மையை எந்த காரணத்திற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்

அதேபோல் லதா மங்கேஷ்கர் இது குறித்து கூறிய போது ’இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளில் வெளிநாட்டவர் தலையிடக்கூடாது என்றும் இந்தியா தனது உள்நாட்டு பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்வோம் என்றும் கூறியுள்ளார்

மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியபோது கருத்து வேறுபாடுகள் அதிகம் இருக்கும் இந்தியாவில் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் விவசாயிகள் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் அமைதியை கொண்டு வருவதற்கும் ஒன்றாக முன்னேறுவதற்கும் அனைத்து தரப்பினர்களும் இடையே ஒரு இணக்கமான தீர்வு ஏற்படும் என நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்

விவசாயிகள் போராட்டம் குறித்து ரிஹானாவின் ட்வீட்டை அடுத்து இந்திய கிரிக்கெட் மற்றும் திரையுலக பிரபலங்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது