அவருடைய பந்திற்கு சச்சினே பயப்படுவார்… சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட அஃப்ரிடி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அஃப்ரிடி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து விலகியதில் இருந்தே சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருவதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் இந்திய வீரர்களுக்கு எதிராக இவர் அடிக்கடி கருத்துத் தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதைத்தவிர உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் தலையிடுவதையும் இவர் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். தற்போது 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியில் சோயிப் அக்தர் பந்திற்கு சச்சின் பயப்பட்டார் என்றும் அதேபோல மற்றொரு பாகிஸ்தான் பவுலருக்கும் இவர் ரொம்பவே பயப்படுவார் என்றும் சர்ச்சையான கருத்தை வெளியிட்டு இருக்கிறார்.
“நான் பயப்படுகிறேன்” என்று சச்சின் அதைத் தானே சொல்லமாட்டார். சோயிப் அக்தரிடம் அசாத்தியமான திறமை இருக்கிறது. அந்த திறமையால் சச்சின் மட்டுமல்ல உலகின் சில சிறந்த பேட்ஸ்மேன்களும் அதிர்ந்து போயுள்ளனர். நீங்கள் மிட்-ஆஃப் அல்லது அட்டைகளில் பீல்டிங் செய்யும்போது அதைப் பார்க்கலாம். ஒரு வீரரின் உடல் மொழியை நீங்கள் உணர முடியும். ஒரு பேட்ஸ்மேன் அழுத்தத்தில் இருப்பதை நீங்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அவர் மற்றவர்கள் சொல்வதைப் போல சிறந்த பேட்ஸ்மேன் இல்லை” என்றும் கூறியிருக்கிறார். இதனால் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
பொதுவாக இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே விளையாட்டைத் தாண்டி ஒரு நாட்டுப்பற்று சார்ந்த உணர்வு இருக்கத்தான் செய்கிறது. அதுவும் சில அதிரடியான போட்டிகளில் கிரிக்கெட் ரசிகர்களே சளைக்கும் அளவிற்கு கடுயைமான போட்டிகளும் இருக்கும். பாகிஸ்தான் கிரிக்கெட் பவுலர்களான அக்தர், வாசிம் போன்றோர்களுக்கு எதிராக இந்திய வீரர்கள் கடுயைமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். சச்சின் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற லீக் போட்டியில் 98 ரன்களை எடுத்த நிலையில் அக்தரின் பந்தில் ஆட்டமிழந்தார். ஆனால் பல நேரங்களில் அக்தரின் பந்தை அசால்ட்டாக அடித்து ரன்களைக் குவித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com