ஒரு மாதத்திற்கு முன்னரே அரையிறுதி அணிகளை கணித்த சச்சின்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது கிளைமாக்ஸ் கட்டத்தை நெருங்கிவிட்டது. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து ஆகிய மூன்று அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்ட நிலையில் அரையிறுதிக்கு தகுதி பெறும் 4வது அணி எது என்பது நாளைய பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளின் போட்டி முடிந்த பின்னர் தெரியவரும்.
இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி 316 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். அதாவது பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 400 ரன்கள் எடுக்க வேண்டும். அதன்பின்னர் வங்கதேச அணியை 84 ரன்களுக்குள் சுருட்ட வேண்டும். இப்போதிருக்கும் வங்கதேச அணியை பாகிஸ்தான் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் வெல்ல முடியுமா? என்பது கேள்விக்குறியே. இதனால் நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெறவே 99% வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் இன்றைய நிலையை கிரிக்கெட் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் ஒரு மாதத்திற்கு முன்னரே சரியாக கணித்திருந்தார். சச்சின், 'அரையிறுதிக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் தகுதி பெறும் என்றும் நான்காவது இடத்திற்கு நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் இரண்டில் ஒன்று தகுதி பெறும் என்றும் ஒரு மாதத்திற்கு முன்னர் சச்சின் அளித்திருந்த பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சச்சினின் அரையிறுதி கணிப்பு மிகத்துல்லியமாக இருந்ததை கண்டு அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.
அரையிறுதிக்கு நியூசிலாந்து தகுதி பெற்றால் இந்தியா-இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதும். அனேகமாக இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப்போட்டியில் மோத வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments