சச்சின் நடிக்கும் 'யார் இவன்' ரிலீஸ் எப்போது?

  • IndiaGlitz, [Wednesday,May 03 2017]

சச்சின், ஈஷா குப்தா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்சன் த்ரில்லர் திரைப்படம் 'யார் இவன்', வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

கபடி விளையாட்டு வீரராக நடித்துள்ள சச்சின், காதலியை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்படுகிறார். அதன் பின்னர் நடப்பது என்ன? என்ற விறுவிறுப்பான திரைக்கதையில் உருவாகியிருக்கும் 'யார் இவன்' திரைப்படத்தை டி.சத்யா இயக்கியுள்ளார்.

இளையதிலகம் பிரபு, கிஷோர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார்.

More News

தண்ணீர் பாட்டில் ரூ.50க்கு விற்றால் எப்படி ஜனங்க தியேட்டருக்கு வருவாங்க! லிவிங்ஸ்டன்

உதயநிதி ஸ்டாலின், ரெஜினா நடிப்பில் எழில் இயக்கிய 'சரவணன் இருக்க பயமேன்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி வெளியாக உள்ளது.

விஜய்சேதுபதியின் அடுத்த அவதாரம்

கோலிவுட் திரையுலகில் இன்றைய தேதியில் அதிக திரைப்படங்களில் நடித்து வருபவரும், ஒவ்வொரு வருடமும் அதிக திரைப்படங்களை ரிலீஸ் செய்வதும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மட்டுமே. இந்த பிசியான பணியிலும் அவர் அடுத்த அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்...

விஜய், சூர்யாவை அடுத்து இன்னொரு பிரபல நடிகருக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்

கோலிவுட் திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் நம்பர் ஒன் இடத்தை நோக்கி மிக வேகமாக நெருங்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். 'இது என்ன மாயம்' படத்தில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சிவகார்த்திகேயனுடன் நடித்த 'ரஜினி முருகன்' மற்றும் 'ரெமோ' ஆகிய இரண்டு சூப்பர் ஹிட் படங்களால் ராசியான நடிகை என்ற முத்திரை குத்தப்பட்டார்...

'விவேகம்' படத்தின் அஜித் பஞ்ச் டயலாக் லீக்?

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் அல்லது அடுத்த வாரம் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

'கருப்பு ராஜா வெள்ளை ராஜா'வில் விஷால்-கார்த்தியுடன் இணையும் இன்னொரு தமிழ் ஹீரோ

கோலிவுட் திரையுலகில் இரண்டு முன்னணி ஹீரோக்கள் இணைந்து நடிப்பது என்பதே எப்போதாவது நடைபெறும் சம்பவமாக இருக்கும். இந்நிலையில் சமீபத்தில் 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா' என்ற படத்தில் விஷால் மற்றும் கார்த்தி இணைந்து நடிப்பதாக வெளிவந்த செய்தியை பார்த்தோம்...