6 வருட சம்பளத்தை சச்சின் என்ன செய்தார் தெரியுமா?
- IndiaGlitz, [Monday,April 02 2018]
இந்திய கிரிக்கெட்டின் கடவுள் என்று வர்ணிக்கப்படும் சச்சின் தெண்டுல்கர் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அவரது பதவிக்காலம் சமீபத்தில் முடிந்தது.
இந்த நிலையில் ஆறு ஆண்டுகள் மாநிலங்களவையில் பணிபுரிந்த சச்சினுக்கு ரூ.90 லட்சம் சம்பளம் மற்றும் இதர உதவித்தொகைகளாக வழங்கப்பட்டது. இந்த தொகை முழுவதையும் ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடையாக சச்சின் வழங்கியுள்ளார். சச்சின் வழங்கிய இந்த நன்கொடைக்கு பிரதமர் அலுவலகம் நன்றி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சச்சின் நாடாளுமன்றத்திற்கு குறைவான காலமே வருகை தந்ததாகவும், அவர் நாடாளுமன்றத்தில் அதிகம் பேசவில்லை என்ற விமர்சனம் எழுந்தபோதிலும், தனக்கு அளிக்கப்பட்ட எம்பி நிதியில் இருந்து மகாராஷ்டிராவில் உள்ள டோன்ஜா மற்றும் ஆந்திராவில் உள்ள புட்டம் ராஜு கந்திரிகா ஆகிய இரண்டு கிராமங்களை தத்தெடுத்து அந்த கிராமங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது