சச்சினிடம் வாழ்த்து பெற்ற இரண்டு பெண்கள் யார் தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,December 19 2017]

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்பட்டு வரும் சச்சின் தெண்டுல்கர், திறமை யாரிடம் இருந்தாலும் அதை பாராட்ட தயங்காதவர். குறிப்பாக பெண்கள் சாதனை செய்யும் போது அவரது பாராட்டு நிச்சயம் இடம் பெற்றிருக்கும்

இந்த நிலையில் இந்திய விமானப்படையின் பயிற்சியை முடித்து விமானிகளாக இரண்டு பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பிரதிபா சிங் மற்றும் ஷிவாங்கி சிங் ஆகியோர் சமீபத்தில் விமானி பயிற்சிகளை முடித்து சான்றிதழையும் பெற்றுள்ளனர். இவர்கள் இருவருக்கும் இந்தியா முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்த நிலையில் லிட்டில் மாஸ்டர் சச்சின் தெண்டுல்கரும் தனது டுவிட்டரில் பிரதிபா சிங் மற்றும் ஷிவாங்கி சிங் ஆகியோர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இந்த இரண்டு பெண்கள் இந்திய விமானப்படையில் இணைந்துள்ளது, விமானப்படைக்கே பெருமையை சேர்த்துள்ளது என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார் சச்சின்.